தியேட்டரில் இல்லாமல் வெளியிடப்பட்ட, அந்த முன்னாள் ஹீரோயின் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்கிறார்கள். கொரோனா ஊரடங்கு குதறிப் போட்டிருக்கிறது சினிமாவை.
வாங்கிய பணத்துக்கு எப்படி வட்டி கட்ட என்று தவித்துக் கொண்டிருக்கி றார்கள் தயாரிப்பாளர்கள்.
கொரோனா பயம் முழுவதும் போகாமல், தியேட்டர் திறக்கக் கூடாது என்கிறது ஒரு தரப்பு. 50 சதவிகித பேருடன் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்கிறது மற்றொரு தரப்பு.
ஒடிடி நிறுவனங்கள்
அப்படியே தியேட்டர்களை திறந்தாலும் ரசிகர்கள் வருவார்களா என்பது சந்தேகமே. இந்த நிலையில்தான் ஒடிடி நிறுவனங்கள், படங்களை நேரடியாக தங்கள் தளங்களில் ரிலீஸ் செய்ய, விலை பேசின.
இந்த லாக்டவுனை சாதகமாகப் பயன்படுத்தி களத்தில் இறங்கின. பல்வேறு நிறுவனங்களில் பேச்சுவார்த்தை நடத்தின.
முன்னாள் ஹீரோயின்
அதில் முதலில் ஒர்க் அவுட் ஆனது, அந்த முன்னாள் ஹீரோயின் நடித்த படம். இந்தச் செய்தி வெளியானதுமே தியேட்டர் உரிமையாளர்கள் கொதிக்கத் தொடங்கினர்.
அந்த நடிகையின் கணவர் மற்றும் நடிகரின் தம்பி நடிக்கும் படங்களுக்கு ரெட் போடுவதாக அறிவித்தார்கள். இது ஒரு பக்கம் இருக்க, மேலும் சில படங்களை, ஒடிடி-யில் வெளியிட தயாரிப்பாளர்கள் பேசிவந்தனர்.
எதிர்பார்த்த வரவேற்பு
பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததை அடுத்து இன்னும் சில படங்கள், ஒடிடியில் வெளியாக இருக்கின்றன. இதற்கிடையே, ஒடிடி-யில் வெளியான அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்கிறார்கள்.
அதாவது படத்தை 9 கோடிக்கு வாங்கிய அந்த நிறுவனம் அதிக வருமானத்தை அள்ளலாம் என்று எதிர்பார்த்ததாம். அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்கிறார்கள்.
முடிவு செய்யாமல்
இதனால் அந்த நடிகையின் கணவர் நடித்திருக்கும் படத்தையும் ஒடிடி-யில் நேரடியாக ரிலீஸ் பண்ண கேட்கிறார்களாம்.
இதுபற்றி முடிவு செய்யாமல் இருக்கிறார்களாம், ஹீரோ தரப்பில். இதற்கிடையே இன்னும் சில, பெரிய ஹீரோ படங்களையும் ஒடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.