50 சவரன் திருட்டு நகையை பார்த்ததும் சுவப்னாவுக்கு சபலம் வந்து விட்டது.. இந்த 50 சவரன் நகையையும் சுருட்டிய பெண் போலீஸ் சுவப்ன சுஜாவை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை சிங்காநல்லூர் குற்றப்பிரிவு ஸ்டேஷனில், 2-ம் நிலை போலீஸாக பணியாற்றி வந்தவர் சுவப்ன சுஜா... இந்த போலீஸ் ஸ்டேஷனில் நீதிமன்றம் தொடர்பான பணி இவரிடம் தான் விடப்பட்டிருந்தது.
இந்நிலையில், 11 குற்ற வழக்குகளில் தொடர்புடைய 50 சவரன் நகையை போலீசார் மீட்டனர்...
அந்த நகைகளை கோர்ட்டில் கொண்டு போய் ஒப்படைக்கும்படி சுவப்ன சுஜாவிடம் தெரிவிக்கப்பட்டு, அந்த நகைகளும் அவர் வசம் வழங்கப் பட்டிருந்தது.
ஆனால், சுவப்னா நகைகளை கோர்ட்டில் ஒப்படைக்கவே இல்லை.. காலம் தாழ்த்தியே வந்து கொண்டிருந்தார்.
இதை பற்றி அதிகாரிகளும் பலமுறை அவரை கேட்டனர்.. நகைகள் ஏன் இன்னும் கோர்ட்டில் ஒப்படைக்கவில்லை என்று அதிகாரிகள் கேட்டால், முன்னுக்குப்பின் முரணான பதில்களையே தந்து வந்துள்ளார்..
மேலும் சில உயர் அதிகாரிகளின் பெயர்களை சொல்லி எஸ்.ஆகி நழுவி வந்துள்ளார்.
ரொம்ப நாட்களாகவே நகையை ஒப்படைக்க வில்லை என்பதால் தான், சிங்காநல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவக்குமார் என்பவர் சுவப்ன சுஜாவிடம் விசாரணை மேற்கொண்டார்..
அவ்வளவு நாள் கெத்துடன் இருந்த சுவப்னா இதில் பயந்துவிட்டார.. உடனே லாங்-லீவு எடுத்து கொண்டு சென்று விட்டார். நீண்ட நாள் விடுப்பிலேயே இருந்ததால், சுவப்ன சுஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சிங்காநல்லூர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இன்று ஜெயிலுக்கும் போக போகிறார்..
அவரை இனிமேல் விசாரித்தால் தான் அந்த நகைகள் என்ன ஆனது? கோர்ட்டில் ஏன் ஒப்படைக்க வில்லை என்று தெரியவரும். ஆனால் ஆரம்பத்தில் சுவப்னா மிக சிறப்பாகவே பணியாற்றி உள்ளார்..
2012-ம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்த, பழைய வழக்குகளில் 85 வழக்குகளுக் கான சாட்சிகளை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று, அவ்வழக்குகளை அந்த வழக்குகள் அனைத்தையும் முழுமையாக முடித்து வைத்திருக்கிறார்..
இதற்காக, 2018-ம் ஆண்டு நீதிபதியிடம் பரிசும் பெற்றிருக்கிறார்.. வெறும் 6 ஆண்டுகளில் சுவப்னாவின் பெயர் முற்றிலும் தலைகீழாகி விட்டது.
நகையை பார்த்ததுமே சபலம் வந்துள்ளது.. யார் நகையை பற்றி கேட்டாலும், கேஸ் முடிகிற வரை ஸ்டேஷனில் தான் நகை இருக்கும் என்று சொல்லியே சமாளித்துள்ளார்..
சஸ்பெண்ட் செய்யப்பட்டும் எந்த வித முன்னேற்றமும் இது தொடர்பாக இல்லாததால் தான் கைது செய்துள்ளனர் போலீசார்!