கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் பாஸ் - அதிரடி !

1 minute read
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப் பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் பள்ளி கல்லூரி தேர்வுகள் அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற வில்லை என்பதும் 
கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் பாஸ்

இந்த தேர்வுகள் எப்போது நடக்கும் என்று தெரியாத சூழ்நிலை தான் இப்போதைக்கு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தாலும், இந்த தேர்வு நடைபெறும் தேதி நெருங்கும் போதுதான் உறுதி செய்யப்படும். 
இந்த நிலையில் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு இன்னும் நடைபெறவில்லை என்பதும் கல்லூரிகள் எப்போது திறக்கும் என்பது குறித்த அறிவிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பாஸ் என்ற அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். 

முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் சதவீத அடிப்படையில் மதிப்பெண் அளித்து டிகிரி அளிக்கப்படும் என்றும் மகாராஷ்ட்ரா அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்ட்ரா அரசு எடுத்துள்ள இந்த முடிவை வேறு சில மாநிலங்களும் இதேபோன்று அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
Tags:
Today | 9, April 2025
Privacy and cookie settings