கறுப்பின போராட்டத்துக்கு அதிபரின் மகளே ஆதரவு தெரிவித்த ஷாக் - டிரம்ப் !

டிரம்புக்கு இதைவிட அசிங்கம் வேற தேவையில்லை.. அவரது மகளே ஜார்ஜ் கொல்லப்பட்டதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு தனது ஆதரவை பகிரங்கமாக வழங்கி யுள்ளார்.
கறுப்பின போராட்டத்துக்கு அதிபரின் மகளே ஆதரவு

அமெரிக்காவின் மின்னபோலிஸ் பகுதியில், கள்ள நோட்டு பயன்படுத்திய தாக ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது கறுப்பின நபர் போலீசாரால் கொல்லப் பட்டார்.
ஜார்ஜை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி இன்னமும் அதிர்ச்சி விலகாமல் உள்ளது.

இந்த சம்பவம் உள்நாட்டு பிரச்சனையாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது. பல லட்சக்கணக்கில் அங்கு கறுப்பின மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். 

போராட்டம் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அமெரிக்கா போல வளர்ந்த நாட்டில் இன்னமும் இப்படி நிறவெறியா என்று உலக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் "நேரத்தை வீணடிக்காதீர்கள்... போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குங்கள்" என்றும், "இந்த போராளிகளை நாய்கள், திருடர்கள்" என்று அதிபர் ட்ரம்ப் சொல்லி உள்ளதும் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.. 

இதற்கு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் டிரம்பை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.. "உங்களால் ஆக்கபூர்வமாக பேசமுடிந்தால் பேசுங்கள், இல்லை யென்றால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள்" என்று கூறியிருந்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
இப்போது டிரம்பின் மகளே, இந்த போராட்டத்துக்கு தன்னுடைய முழுமையான ஆதரவை தந்துள்ளார்.. "கலவரத்தையும் கொள்ளையையும் நிறுத்த நான் ராணுவத்தை இறக்க போகிறேன், 

ஆளுநர்கள் எல்லாம் என்ன செய்கிறீர்கள் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தும், அவரது மகள் அதை உதாசீனப்படுத்தி உள்ளார். 

டிரம்பின் இளைய மகள் டிப்ஃபனி.. இவருக்கு 26 வயதாகிறது.. டிரம்பின் 2வது மனைவி மார்லா மேப்பிள்ஸ்-ன் மகள் இவர்.
பிரேத பரிசோதனை அறிக்கை

இவர்தான் ஜார்ஜ் கொல்லப்பட்டதற்கு எதிராக அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டங்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ளார். 
சோஷியல் மீடியாவில் #blackoutTTuesday என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது... இந்த டிரெண்டை ஆதரிப்பதற்காக ஒரு கருப்பு நிற போட்டோவும் ஷேர் செய்து வருகிறார்கள்... இந்த கருப்பு படத்தைதான் இன்ஸ்டாகிராம், மற்றும் ட்விட்டரில் டிப்பனி பதிவிட்டுள்ளார்.

George Floyd-பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?

"தனியாக நாம் மிகக் குறைவாகவே சாதிக்க முடியும்; ஒன்றாக நாம் இவ்வளவு சாதிக்க முடியும்" என்று ஒரு கேப்ஷனையும் போட்டுள்ளார்.. 

மேலும், #justiceforgeorgefloyd என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பதிவிட்டுள்ளார். இவர் மட்டுமல்ல, இவரது அம்மா மார்லா மேப்பிள்ஸும், இதே போல கருப்பு போட்டோவை பதிவிட்டு, ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings