நீங்கள் எல்லா காலத்திலும் ஐஸ்க்ரீம் மற்றும் குளிர்பானங்கள் உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர ? ஆம் எனில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
நீங்கள் எந்த நேரமும் குளிர்ச்சியான ஐஸ்க்ரீம் உட்கொள்பவராக இருந்தால் ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீம் கூட உங்கள் மூளையை முடக்கி விடலாம்.
எந்த ஒரு குளிர்ச்சியான பொருளையும் திடீரென்று உட்கொள்ளும் போது மூளை முடக்கம் என்னும் நிலை உண்டாகிறது.
இது ஒரு வகை தலைவலி என்றாலும் வழக்கமான தலைவலியைக் காட்டிலும் சற்று தீவிர வலியைக் கொண்டிருக்கும்.
குளிர்ச்சியான வெப்பநிலைக்கு உங்கள் மூளை வெளிப்படும் போது இந்த பாதிப்பு உண்டாகிறது. பொதுவாக பலரும் இதனை சாதாரண தலைவலி என்று அலட்சியம் செய்து விடுகின்றனர்.
ஆனால் இந்த பாதிப்பு அதனைக் காட்டிலும் பெரியது என்பதால் அலட்சியம் செய்ய வேண்டாம்.
மூளை முடக்கம் ஏன் உண்டாகிறது?
நீங்கள் ஒரு குளிர் பானம் பருகும்போது அல்லது ஐஸ்கிரீமை மிக வேகமாக சாப்பிடும் போது, உங்கள் உள் கரோடிட் தமனி தொண்டையின் பின்னால் உள்ள வெப்பநிலையை விரைவாக மாற்றுகிறது.
இதனால் மூளை இரத்த ஓட்டத்தை நிறுத்தி, வலியை ஏற்படுத்துகிறது. இது தவிர மற்றொரு விஷயத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது நமது மூளை எந்த திடீர் மாற்றத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை.
அத்தகைய மாற்றம் ஏற்பட்டால், மூளை தன்னுடைய இயக்கத்தை நிறுத்தி விடும . இதையே மூளை முடக்கம் என்று கூறுவர்.
மூளையின் நியூரான்
மூளையில் உள்ள லட்சக்கணக்கான நியூரான் காரணமாக மூளை இந்த வலியை உணர்வதில்லை.
ஆனால் மூளையின் வெளிப்புறத்தில் உள்ள மூளையுறை அதாவது இரண்டு தமனிகள் சந்திக்கும் இடமான இந்த இடத்தில் வலி உணரப்படுகிறது.
குளிர் அதிகரிக்கும் போது தமனிகள் நீர்த்து, சுருக்கத்தை உண்டாக்குகிறது. இதனால் தீவிர தலைவலி உண்டாகிறது.
தலைவலி ஏற்படும்
மேலும் ஒரு குளிர்ச்சியான பொருள் முதலில் வாயின் பிற்பகுதியில் அல்லது தொண்டையில் படுகிறது. இந்த இடங்கள் பொதுவாக வெப்பநிலைக்கு அதிக உணர்திறன் மிக்கவை.
இவை இரத்த குழாய்களை மற்றும் நரம்புகளை ஊக்குவித்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. இந்த திடீர் இரத்த ஓட்ட அதிகரிப்பின் காரணமாக மூளை உறைகிறது.
மூளை உறைவு ஏற்பட்டதால், மூளையில் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இரத்த ஓட்டம் தடைபடுவதால் தலையில் ஒரு சிறு வலியை உணரலாம்.
மூளை முடக்கத்தை எவ்வாறு தவிர்ப்பது?
மூளை முடக்கத்திலிருந்து ஒருவர் தன்னுடைய மூளையை எளிதாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது அவை என்னவென்று காண்போம்.
பாதுகாப்பு #1
குளிர்ச்சியான உணவுப் பொருட்களான ஐஸ்கிரீம், குளிர் பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் தொடர்ந்து இவற்றை உட்கொண்டு வந்தால், வாயின் மேல் பகுதியில் இந்த பொருட்கள் திடீரென்று படாமல், உட்கொள்ளுங்கள். மெதுவாக சாப்பிடப் பழகுங்கள்.
பாதுகாப்பு #2
உங்கள் வாயின் வெப்பநிலை மற்றும் நாவின் வெப்பநிலையில் சமநிலையை கடைபிடியுங்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது,
குளிர்ச்சியான பொருட்களை நீங்கள் உட்கொள்ளும் போது, மெதுவாக அதனை உங்கள் நாவால் உருக்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் வாயின் வெப்பநிலையை மென்மையாக வைத்துக் கொள்ள உங்கள் நாக்கு உதவும். மூளை இந்த மாற்றத்தை உணர்ந்து கொள்வதற்குள் வெப்பநிலை சமன் செய்யப்பட்டு விடும்.
பாதுகாப்பு #3
சூடான பொருட்கள் உட்கொண்டவுடன் குளிர்ச்சியான பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். உங்கள் வாய் குளிர்ச்சி மற்றும் வெப்பத்திற்கு சுலபமாக மாறுவதால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
மேலும் இந்த மாற்றங்களுக்கு உங்கள் மூளை தயாராக இருப்பதில்லை என்பதால் மூளை முடக்கம் உண்டாகிறது.
பாதுகாப்பு #4
குளிர் காலங்களில் படுக்கையை விட்டு உடனடியாக எழ வேண்டாம். சற்று நேரம் எழுந்து படுக்கையில் அமர்ந்து பின்னர் தரையில் கால்களை வைக்கவும்.
வெளியில் செல்ல நேரும் போது தலையை மூடிக் கொள்ளவும். இதனால் சுற்றுப்புறத்தின் வெப்பநிலை உங்கள் உடல் வெப்பநிலையில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும்.