விமானத்தில் சுவாசிக்க ஆக்சிஜன் எங்கிருந்து கிடைக்கிறது?

2 minute read
விமானங்களின் கேபின் வெளிக்காற்று அழுத்தத்தால் பாதிக்கப்படாத வகையில் சிறந்த தடுப்பு அமைப்புடன் உருவாக்கப்படுகிறது. 
விமானத்தில் பயணிப்போருக்கான பிராண வாயு

இதனால், உள்ளே இருப்பவர்களுக்கு தேவையான பிராண வாயு விசேஷ அமைப்பு மூலமாக எந்நேரமும் சப்ளை செய்யப்படுகிறது.

பலரும் விமானத்திற்கு தேவையான பிராண வாயு வெளிப்புறத்தி லிருந்து உறிஞ்சப்பட்டு, பின்னர் சுத்திகரிப்பு கருவிகள் உதவியுடன் விமானத்திற்குள் சப்ளை செய்யப்படுவதாக கருதுகின்றனர். 
எஞ்சினிலிருந்து பெறப்படும் காற்று
விமானம் 35,000 அடி உயரம் வரை பறக்கின்றன. அங்கு போதுமான காற்று இருக்காது என்ற கூற்று தவறானது. போதுமான காற்று இருந்தாலும், அதில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். 

எனவே, இதற்காக விசேஷ அமைப்பு மூலமாக விமானத்தில் பயணிப்போருக்கான பிராண வாயு அளவு சீரான அளவில் தக்க வைக்கப்படுகிறது.

இதற்காக, விமானத்தின் உட்புற பகுதிக்கான காற்று எஞ்சினிலிருந்து தான் பெறப்படுகிறது. 

எஞ்சினில் இருக்கும் கம்ப்ரஷர்கள் மூலமாக 25 சதவீதம் முதல் 50 சதவீதம் பெறப்படும் அழுத்தம் கூட்டப்பட்ட காற்று தான் கேபினுக்குள் பல்வேறு அமைப்புகள் மூலமாக சுத்திகரிக்கப்பட்டு சப்ளையாகிறது.
எஞ்சின் கம்பரஷரிலிருந்து பெறப்படும் காற்று

எஞ்சின்களிலிருந்து கழிவாக வெளியேறும் காற்று புகைப்போக்கி வழியாக வெளியேற்றப்படும். ஆனால், கேபினுக்கு தேவைப்படும் காற்று கம்பரஷர்கள் மூலமாகவே சப்ளை செய்யப்படுகிறது. 

எஞ்சின் கம்பரஷரிலிருந்து பெறப்படும் இந்த காற்று 200 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பத்தை கொண்டிருக்கும். இதனை Bleed Air என்று குறிப்பிடுகின்றனர்.

இதனை முதலில் குளிர்விப்பு அமைக்குள் செலுத்தி சரியான வெப்பநிலைக்கு மாற்றப்படுகிறது. பின்னர், சுத்திகரிக்கப்படும் தடுப்பு அமைப்பு வழியாக கேபினுக்குள் செலுத்தப்படுகிறது. 
40000 அடி வரை பறக்கும்
இந்த காற்றையே பயணிப்பவர்கள் சுவாசிக்கின்றனர். விமானத்தின் பின்புறத்தில் கொடுக்கப்படும் சிறிய வால்வு அமைப்பு மூலமாக கேபினுக்குள் இருக்கும் அசுத்தக் காற்று வெளியேற்றப்படுகிறது. 

இந்த தொடர் நிகழ்வு மூலமாக கேபினுக்குள் சீரான காற்றழுத்தமும், குளிர்ச்சியும் தக்க வைக்கப்படுகிறது.

விமானத்தை செலுத்துவதற்கு மட்டுமல்ல, பயணிப்பவர்களுக்கு சீரான பிராண வாயுவை பெறுவதிலும் எஞ்சின்களின் பங்கு முக்கியமானது. 

விமானம் எரிபோருளை சேமிக்க அதிகமான உயரத்தில் சுமார் 40000 அடி வரை பறக்கும். அப்போது அங்கே காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும்.
விமானத்தில் ஆக்சிஜன்எங்கிருந்து கிடைக்கிறது?

அதை சரிசெய்ய இயந்திரத்தி லிருந்து காற்று சிறது எடுக்கப்பட்டு தேவையான வெப்பத்தில் விமானத்தின் உள்ளே அனுப்பப்படும். அதனால் விமானத்தின் உள்ளே ஏறக்குறைய 8 psi காற்று அழுத்தம் கொடுக்கப்படும்.
அந்த காற்று அழுத்தம் விமானம் 7000 அடியில் பறப்பதற்கு சமமாகும். அதனால் விமானத்தின் உள்ளே ஆக்ஸிஜன் அதிக அளவு குறைவு ஏற்படாது.
உயரத்தில் பறக்கும் போது எந்த காரணத்தினாலாவது காற்று அழுத்தம் குறைந்தால் முதலில் வெளியேற்றும் வால்வு அமைப்பை விமானிகள் மூடி விடுவார்கள். 

இதன் மூலமாக, விமான கேபினுக்குள் உடனடியாக காற்றழுத்தம் மாறுபாடு ஏற்படாது. எனினும், காற்றில் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறையும். விமானி உடனே விமானத்தை 10000 அடி உயரத்திற்கு வேகமாக கீழே இறக்குவார்.
விமானம் எரிபோருளை சேமிக்க
அந்த சமயத்தில் விமானங்களில் பிரத்யேக உருளைகளில் ஆக்சிஜன் நிரப்பி வைக்கப்பட்டு இருக்கும்.

ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனியாக கொடுக்கப்படும் ஆக்ஜிஜன் மாஸ்க் மூலமாக, அந்த உருளைகளில் உள்ள ஆக்சிஜனை சுவாசிக்க அறிவுறுத்தப்படும்.

அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்கு தேவையான ஆக்சிஜனை பயணிகளுக்கு வழங்க முடியும். அதற்குள், அருகிலுள்ள விமான நிலையத்தை நோக்கி விமானத்தை செலுத்தி தரை இறக்க முடிவு செய்கின்றனர்.
எப்படி இந்த மாஸ்கை பயன் படுத்துவது என்று ஒவ்வோரு முறையும் விமானம் புறப்படும் முன் விமானப் பணிப்பெண் செய்து காட்டுவார்.
காற்றின் அழுத்தம்

ஒரு சிறு தகவல்.நாம் தரையில் இருக்கும் போது கிட்டத்தட்ட 14 psi அழுத்தம் கொண்ட காற்றை சுவாசிக்கிறோம். 
எனவே 8 psi அழுத்தம் கொண்ட பறக்கும் விமானத்தின் உள்ளே, நமக்கு ஆக்ஸிஜன் அளவில் பெரிய வேறுபாடு தெரியாது.

எஞ்சின்கள் மூலமாகவே விமான கேபினுக்குரிய காற்று பெறப்படுவது இதுவரை கேள்விப்படாத விஷயமாக இருக்கலாம்.
Tags:
Privacy and cookie settings