வள்ளுவர் கோட்டம் ரோட்டில், விபச்சாரம் செய்வதற்காக ராத்திரி நேரத்தில் நின்று கொண்டிருந்த திருநங்கை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்..
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை சென்னையில் ஏற்படுத்தி வருகிறது. சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சபீனா.. இவர் ஒரு திருநங்கை.. 19 வயதாகிறது.. பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் முன்தினம் ராத்திரி, தனது தோழிகளுடன் வள்ளுவர் கோட்டம் அருகே டூ வீலரில் நின்று கொண்டிருந்தார்.. அப்போது 4 ரோந்து போலீசார் அங்கு வந்தனர்..
திடீரென போலீஸை அங்கு பார்த்தும், மந்த விபச்சார கும்பல் அப்படியே அலறி அடித்து தப்பி ஓடியது. ஓடிப் போகிற அவசரத்தில், சபீனா தன்னுடைய டூ வீலரையும் அங்கேயே போட்டு விட்டு ஓடியுள்ளார்..
உடனே போலீசார் சபீனாவின் வண்டியை எடுத்து கொண்டு ஸ்டேஷனில் வைத்தனர்.. கொஞ்ச நேரத்தில் சபீனா தன் தோழிகளை அழைத்து கொண்டு ஸ்டேஷன் வந்தார்..
தன் பைக்கை திருப்பி தரும்படி போலீசார்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் உரிய ஆவணங்களை காட்டிவிட்டு, வண்டியை எடுத்து செல்லும்படி சொல்லி உள்ளார்..
இது வாக்குவாதமாக தொடங்கி அவர்களுக்குள் தகராறாக உருவெடுத்தது.. அதனை தொடர்ந்து மனமுடைந்த சபீனா, தன் வீட்டுக்கு வந்து விட்டார்..
அழுது கொண்டே வந்தவர், தன் வீட்டு மாடிப்படிக்கட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்த போலீசார், அவரது சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்... இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்...
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனது தரப்பில் ஒரு விளக்கத் தந்துள்ளனர்.. அதில், "ரோந்து பணிக்கு சென்றோம்..
தவறான தொழிலுக்காக நின்று கொண்டிருந்த சபீனாவின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய அபராதம் பெறப்பட்டு, வண்டியும் ஒப்படைத்து விட்டோம்.
அதற்கு பிறகு அவர் கிளம்பி சென்று விட்டார்.. ஆனால் வீட்டிற்கு போகிற வழியில் 3 ஆண் நண்பர்களை சந்தித்துள்ளார்.. அவர்களுடன் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது..
அதனால் தான் வீட்டுக்கு போய் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.. அந்த ஆண் நண்பர்கள் யாரென விசாரித்து வருகிறோம்" என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சபீனாவின் கையில் போலீசார் அடித்ததாகவும், வளையல் உடைந்ததாகவும் சக திருநங்கைககள் குற்றம் சாட்டுகிறார்கள்..
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி முன்பு கூடி, சபினாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டமும் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...
பிறகு அவர்களை போலீசார் சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தனர். ஊரடங்கில் போலீசாருக்கும் மன உளைச்சல் இருக்கிறது..
நடவடிக்கைக்கு ஆளாகும் பொது மக்களுக்கும் மனஉளைச்சல் ஏற்படுகிறது.. எல்லாருக்குமே இப்போ பிரச்சனை தான்..
இதில் இருந்து மீண்டு வர வேறு ஏதாவது மனநல ஆலோசனையை அரசு இலவசமாக வழங்கினால் நல்லா இருக்கும்... இந்த திருநங்கை எப்படி இறந்தார் என்ற உண்மையும் வெளி வர வேண்டும்.