கேரளாவில் உத்ரா மீது பாம்பை ஏவி கொன்ற சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் உத்ரா மரணத்தையே மிஞ்சி ஒரு கொடுமை நம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது!
களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பின் ஷைனி.. 30 வயதாகிறது.. இவருக்கு கல்யாணமாகி விட்டது.. ஒரு ஆண் குழந்தை உள்ளது... ஆனால் டைவர்ஸ் ஆகி விட்டது.
அதனால் மார்த்தாண்டத்தை சேர்ந்த மெர்லின் ஜெபராஜ் என்பவருடன் 2வது கல்யாணம் நடந்தது.. ஜெபராஜுக்கு 40 வயசாகிறது.. கடந்த பிப்ரவரி 20-ம் தேதி இந்த கல்யாணம் நடந்தது..
ஷைனியின் குழந்தையை கல்யாணத்துக்கு பிறகு பார்த்து கொள்வதாக உத்தரவாதம் செய்த ஜெபராஜ், கல்யாணத்துக்கு பிறகு அப்படியே பல்டி அடித்தார்.
குழந்தையை மட்டுமல்ல, ஷைனியையும் சேர்த்து கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்.. அந்த குழந்தையை பேட்மின்ட்டன் பேட்டாலேயே அடித்து விடுவாராம்..
நைட் நேரத்தில் வெளியே தள்ளி கதவடைத்து கொடுமையும் படுத்துவாராம்.. இந்த கொடுமைப்படுத்துவது கடைசியில் விஷம் வைத்து கொல்லும் வரை வந்து விட்டது..
சம்பவத்தன்று இரவு, ஷைனிக்கு அவரது மாமியார் ஜூஸ் தந்திருக்கிறார்.. அதை சாபபிட்டு அவர் மயங்கி விட்டார்.
அவர் மயங்கி விழுந்ததும், ஜெபராஜ் மருந்தே இல்லாமல் காலி ஊசியை இடுப்பில் 2 முறை குத்தி இருக்கிறார்.. அதாவது வெறும் காற்று நிரம்பிய ஊசியை உடம்பில் செலுத்தினால், மாரடைப்பு வந்து உயிரே போய் விடும்.
ஆனால் 2முறை ஊசியை இடுப்பில் குத்தியும் ஷைனி பிழைத்து விட்டார்.. மறுநாள் காலை இடுப்பு வலி வந்துள்ளது.. அந்த வலியுடனே வீட்டு வேலையையும் பார்த்துள்ளார்..
ஷைனி தெம்பாக வேலை செய்வதை பார்த்த ஜெபராஜ் டென்ஷன் ஆகிவிட்டார். அதனால் வலிய சண்டை போட்டார்.. தம்பதிக்குள் சண்டை வெடித்ததும், மனம் நொந்து அம்மா வீட்டுக்கு சென்று விட்டார் ஷைனி.
ஆனால் அங்கு போனதும் உடம்பு இன்னும் மோசமாகி விட்டது.. அதனால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்..
அங்கு டெஸ்ட் செய்த போது தான், ஷைனியின் உடம்பில் வெறும் ஊசியால் காற்று உடம்பில் செலுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது... அப்போது தான் மாமியார் தந்த விஷ ஜூஸ் பற்றியும் தெரிய வந்தது..
இப்படி ஊசியை செலுத்தி அதனால் மாரடைப்பு ஏற்பட வைத்து ஷைனியை கொல்ல சதி நடந்ததாக பிறகுதான் தெரிய வந்தது.. இது குறித்து மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் தரப்பட்டது...
அந்த புகாரின் அடிப்படையில் ஜெபராஜ், மாமனார் சவுந்தர்ராஜ், மாமியார் ஜெஸ்டின் பாய் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..
ஆனால் 3 பேருமே எஸ்கேப்.. எங்கே இருக்கிறார்கள் என்று தெரிய வில்லை.. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் ஷைனியின் சொத்துதான்.. அதைதன் பெயருக்கு எழுதி கொடுக்க ஜெபராஜ் இதையெல்லாம் செய்து வந்திருக்கிறார்..
உத்ராவை கூட சொத்துக்காகத்தான் கொன்றார்கள்.. அது போலவே இந்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
கணவன் - மனைவியை, ஒருவரை பிடிக்கவில்லை என்றால், விவகாரத்து உட்பட எத்தனையோ வழிகள் உள்ள நிலையில்,
இப்படி பாம்பை விட்டு கொல்வதும், விஷத்தை வைத்து கொள்வதும் ஜீரணிக்க முடியாதது.. இதில் அப்பாவிகள் உயிர்தான் பறிபோகிறது!