விடலைப் பருவத்தில் (டீன் ஏஜ்) மட்டுமல்ல, இருவரும் சேர்ந்து தனித்து வாழ தகுதி பெறாத காதலும் அவர்களது வாழ்க்கையில் சூறாவளியாகத்தான் போய்விடும்.
பொதுவாகவே பலரது காதலும் 16 முதல் 18 வயதிற்குள்தான் ஏற்படுகிறது என்றாலும், அது முதல் காதலாகவும் சொல்லப்படாத பிரிந்து போன காதலாகவும் தான் இருக்கிறது.
இந்த வயதில் தாங்கள் அடிக்கடி சந்திக்கும், தன்னிடம் மகிழ்ச்சியாக பேசும், தனக்கு பிடித்தவர்களாக இருக்கும் ஒருவரை காதலிப்பது, அவர்களை தனது உயிரினும் மேலாக நினைப்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள்.
இதற்கு காதல் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்வார்கள். ஆனால் இந்தக் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும்.
இதற்கு காதல் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்வார்கள். ஆனால் இந்தக் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும்.
அதாவது இன்று அவர் பார்க்கும் ஒரு அழகி அல்லது அழகான இளைஞனை விட சிறப்பாக, இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காதல் அவர் பின்னாடியே ஓடிவிடும்.
அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு, அடுத்த காதலில் இறங்கிவிடுவார்கள்.
அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு, அடுத்த காதலில் இறங்கிவிடுவார்கள்.
சிலரது காதல் இதையெல்லாம் தாண்டி, தனக்கு பாடம் நடத்தும் ஆசிரியை/ஆசிரியர், சினிமா நட்சத்திரம், விளையாட்டு வீரர்கள் என் அவர்களது காதலே இயல்வை மீறியதாக இருக்கும். அவர்களுக்குள் ஒரு கனவு எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும்.
அதன் மூலம் தங்களது காதலை அவர்கள் வளர்த்துக் கொண்டிருப்பார்கள். இவர்களை, வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்கள் என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஒருவரை காதலித்து, அவரிடம் காதலுக்கு சம்மதம் பெற்று, திருமணம் வரை செல்லும் தைரியம் இழந்தவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர்.
இவர்களை விட்டுவிடுவோம். நாம் மேலே பார்த்த காதலுக்கு வருவோம் ஒருவளை அல்லது ஒருவனை காதலிக்க முக்கியமானது எது? மனம் என்று சொன்னால் அது தவறு.

மனம் காதலிக்கச் சொன்னால் அப்போது மூளை என்ன செய்து கொண்டிருந்தது என்று கேட்க வேண்டி வரும்.
எனவே, காதலிப்பது என்பது மூளையுடன் தொடர்புடையது என்பதை முதலில் உறுதி செய்யுங்கள். ஒருவரை காதலிக்கும் முன்பு. நமக்குள்ள வருமானம், படிப்பு, மன உறுதி, உடல் உறுதி போன்ற வற்றையும் ஆராய வேண்டும்.
வருமானம் இல்லாதவர்கள் காதலிக்கக் கூடாதா என்று கேள்வி எழலாம். ஆனால் காதல் வெற்றி பெற்று திருமணமாக வேண்டும் என்றால் அதற்கு வருமானம் வேண்டும்.
திருமணம் செய்து கொள்வதற்காக காதலிப்பவர்கள், தங்கள் காதல் காதலுக்குப் பிறகும் தொடர வேண்டுமானால் வருமானம் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும்.

காதலிக்கவும், காதலிக்கப்படவும் அனைவருக்கும் உரிமை இருந்தாலும், காதலில் வெற்றி பெற பல தகுதிகள் வேண்டும் என்பது தான் நிச்சயமான உண்மை.
படிக்கும் வயதில் காதலித்து வீட்டை விட்டு ஓடிய எத்தனையோ பெண்கள் தற்போது வறுமையில் வாடுவதைக் கண்கூடாக பார்க்கிறோம்.
படிக்கும் வயதில் காதலித்து வீட்டை விட்டு ஓடிய எத்தனையோ பெண்கள் தற்போது வறுமையில் வாடுவதைக் கண்கூடாக பார்க்கிறோம்.
எனவே, படிக்கும் வயதில் படிப்பதை மட்டும் பார்க்க வேண்டும். அந்த வயதில் அரும்பலாம் ஆனால் அது கனிந்து விடக் கூடாது என்பதில் மனம் உறுதியாக இருக்க வேண்டும்.
எதையும் தள்ளிப் போட்டுப் பாருங்கள் அதன் வீரியம் குறையும். அது காதலுக்கும் பொருந்தும்.
எதையும் தள்ளிப் போட்டுப் பாருங்கள் அதன் வீரியம் குறையும். அது காதலுக்கும் பொருந்தும்.