உடம்பெல்லாம் ரத்தம்.. அதிர்ச்சியில் கமிஷனர் ஆபீஸ்.. பதறிய கோவை !

உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட சொட்ட கோவை கமிஷனர் ஆபீசுக்குள் நுழைந்தவரை பார்த்ததும் அங்கிருந்தோர் அலறி அடித்து கொண்டு ஓடினர்.
உடம்பெல்லாம் ரத்தம்

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம்... இவர் ஒரு கட்டிட தொழிலாளி... கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது.. 
அதனால், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். ஆனால் அவர் மனைவியோ, சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியிலேயே உயிரிழந்து விட்டார்.. 

இது கொரோனா காலம் என்பதால் ஊருக்கு செல்ல முடியாமல் அங்கேயே மாட்டி கொண்டார் ராஜரத்தினம்.. அப்படியே ரோட்டோரமே படுத்து கொள்வது, பசித்தால் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு கொள்வது.. 

இப்படியே நாட்களை கழித்து வந்தார். நாளைடவில் கையில் இருந்த காசும் தீர்ந்து போயிற்று.. அதனால், மீன்பிடித்து விற்கலாம் என்று முடிவு செய்தார்.. 

அதன்படி, இன்று கோவை வாலாங்குளத்தில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது, அங்கே ஏற்கனவே மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜரத்தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.. ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லாரும் சேர்ந்து ராஜரத்தினத்தை கடுமையாக தாக்கியுள்ளனர்... 
கட்டிட தொழிலாளி

இதனால் அவர் தலையில் படுகாயம் ஏற்பட்டது.. கை கால்களில் ரத்தம் வழிந்தது.. உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட சொட்ட நடுரோட்டிலேயே ஓடினார்.

பின்னர், அப்படியே கோவை கமிஷனர் ஆபீசுக்குள் புகார் கொடுக்க நுழைந்தார்.. அவரை பார்த்ததும் அங்கிருந்தோர் எல்லாருமே பதறி போய்விட்டனர்.. 
ரத்தம் வழிய வழிய வந்து நின்றதால், அவரிடம் அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தி, அதன் பிறகு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்... 

அவர்களிடம் "எனக்கு நீதி வேணும் சார்.. ஊருக்கு செல்ல ஏற்பாடு பண்ணிக்குடுங்க" என்று அழுது கொண்டே சென்றார்.
Tags:
Privacy and cookie settings