இந்தியாவின் மத்திய பிரேதேசம் மாநிலத்தில் உள்ள பெட்டுல் மாவட்டத்தில் உள்ள ஜிஹாரடோங்கிரி நகர் பகுதியை சந்தீப் யுகே.
இவர் அங்குள்ள போபால் ஹோஷங்காபாத் பகுதியில் படித்து வந்த நேரத்தில், அப்பகுதியை சார்ந்த பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்த நிலையில், சந்தீப்பிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர்.
நண்பர்களாக இருந்த இருவருக்கும் இந்த நட்பு தொடர வேண்டும் என்ற ஆவல், காதலாக மாறியுள்ளது.
இதன்பின்னர் சந்தீப் தனது தோழி குறித்து கூறவே, பெற்றோர்களுக்கு அதிர்ச்சி ஆகியுள்ளது. மேலும், திருமணத்திற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இதனால் மூன்று குடும்பமும் ஒன்று சேர்ந்து பேசி முடிவெடுத்து, சந்தீப்பிற்கு இரண்டு பெண்களையும் மணமுடிக்க முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
இதற்கு பெண்மணிகளும் ஒப்புக் கொண்ட நிலையில், கடந்த 29 ஆம் தேதியன்று இவர்களின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த திருமண விவகாரம் ஜிஹாரடோங்கிரி கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிய வந்துள்ளது. இதனை யடுத்து இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், இரண்டு திருமணம் முடிப்பது சட்டப்படி குற்றம் என்பதை அவர் குறிப்பிட்டுள்ள நிலையில்,
விருப்பத்தின் பேரில் தான் இந்த திருமணம் முடிக்கப்பட்டது என்பதை கூற புதுமண ஜோடிகள் காவல் நிலையத்தில் காத்து கொண்டு உள்ளது.