புல்லட் ரயில் 400 km வேகத்தில் எவ்வாறு இயங்குகிறது?

இதற்கான பதிலை அறிவதற்கு முன் முதலில் நமக்கு Bullet Train- க்கும் MagLev Train-க்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும்.
புல்லட் ரயில் எவ்வாறு இயங்குகிறது?
ஏனெனில் 250 கிமீ/மணி வேகத்திற்கு மேல் செல்லும் தொடர் வண்டிகள் அனைத்தும் புல்லட் இரயில்கள் என கூறப்பட்டாலும் 400 கிமீ/மணி வேகத்தில் MagLev வகை தொடர் வண்டிகள் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன.

புல்லட் தொடர்வண்டி:
புல்லட் தொடர்வண்டி
புல்லட் இரயில் தொழில் நுட்பமானது இன்றோ நேற்றோ உருவானது கிடையாது. Hideo Shima என்ற ஜப்பானிய பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்டு 1964 -லிலேயே இந்த தொழில் நுட்பம் மூலம் தொடர் வண்டிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்து விட்டது.

முதலில் உருவாக்கப்பட்ட புல்லட் தொடர் வண்டிகள் சாதாரண தொடர் வண்டிகளில் இயங்குவதைப் போன்ற அமைப்பில் உருவாக்கப் பட்டாலும் இதற்காகவே தண்டவாளங்களில் (Rails) சில மேம்பாடுகள் செய்யப்பட்டன. 

அதாவது, அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தை தாக்குவதற்காக வழக்கமாக பயன்படுத்தப்படும் உலோகத்தை விட வலிமையான உலோகங்களால் ஆன தண்டவாளங்கள் பயன்படுத்தப்படும்.
தொடர்வண்டியின் அதிகமான வேகத்தால் ஏற்படும் அதிர்வுகளை முடிந்தவரை குறைப்பதற்காக தொடர்ச்சியாக இணைக்கப்பட்ட தண்டவாளங்கள் (Continuous Welded Rails). 

இவ்வகையான தண்டவாளங்களில் வெப்ப விரிவாக்கத்திற் காக (Thermal Expansion) சிலநூறு மீட்டர்களுக்கு ஒரு இடைவெளி விடப்படும்.
Continuous Welded Rails
முடிந்தவரை வளைவான பாதைகள் தவிர்க்கப்படும். மேலும், வளைவான இடங்களில் தண்டவாளங்கள் போடப்படும் போது வளைவரையின் ஆரம் (Radius of Curvature) சாதாரண தண்டவாளத்தை விட அதிகமாக போடப்படும்.
இது போன்ற சில மாற்றங்கள் செய்யப்படும். மேலும் சாதாரண தண்டவாளங்களிலும் வேகக் கட்டுப்பாட்டோடு புல்லட் தொடர் வண்டிகள் இயக்கப்படும்‌.

MagLev தொடர்வண்டிகள்:
MagLev தொடர்வண்டிகள்
இந்த வகை தொழில் நுட்பமானது 1979-லேயே அறிமுகப்பட்டாலும் போதிய அறிவியல் முன்னேற்றம் இல்லாததால் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்க ளிலேயே நிறுத்தப்பட்டது.

MagLev என்றால் என்ன?

Magnetic Levitation என்ற வார்த்தையின் சுருக்கமே MagLev. இம்முறையில் தொடர் வண்டியானது மின்காந்தத்தின் ஒட்டு (Attractive) மற்றும் விலக்கு (Repulsive) விசையை பயன்படுத்தி இரயிலை ஒரு சிறிய அளவில் தரையி லிருந்து உயர்த்தி செலுத்தப்படுகிறது. 
MagLev என்றால் என்ன?
இதில் காந்தவிசையின் மூலம் இரயிலை தரையில் இருந்து உயர்த்துவது Levitation என்றும் முன்னோக்கி தள்ளுவது - உந்துதல் Propulsion என்றும் அழைக்கப்படும்.

சாதாரண இரயில்வே போலல்லாமல் இவ்வகையில் பயன்படுத்தப்படும் தண்டவாளங்கள் Guideway என்று அழைக்கப்படும். பொதுவாக MagLev தொடர் வண்டிகளில் இரண்டு வகையான Magnetic Levitation முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. 
அவை,

மின்காந்த தொங்குதல் - Electro Magnetic Suspension (EMS)

மின்சத்தி தொங்குதல்- Electro Dynamic Suspension (EDS)

மின்காந்த தொங்குதல் (EMS)

நிலை காந்தம் (permanent magnets) மற்றும் மின் காந்தங்களின் (Electro Magnets) மூலம் செயல்படும் இவ்வகை தொழில் நுட்பமானது ஜெர்மனி நாட்டில் உருவாக்கப்பட்டது (German Transrapid System).

Transrapid Maglev - Maglev
Transrapid Maglev - Maglev
இம்முறையில் நிலை காந்தால் ஆன Guideway-யானது மின்காந்தத்தால் ஆன தொடர் வண்டியின் அடிப் பாகத்தால் மூடப்பட்டிருக்கும். மேலே உள்ள படத்தில் பச்சை மற்றும் சிவப்புநிறம் முறையே நிலை மற்றும் மின் காந்தங்கள் ஆகும். 

இதில் stator மற்றும் Support காந்தங்கள் தொடர் வண்டியை உயர்த்துவதற்கும் (Livitation) பக்கவாட்டில் உள்ள Guidence Magnet தொடர் வண்டியை நிலையாக வைத்திருக்கவும், வேகக் கட்டுப் பாட்டிற்காகவும் பயன்படுகிறது.

தொடர்வண்டி மின்காந்தங்களில் காந்தசக்தி செலுத்தப்படும் போது காந்த விசையால் தொடர் வண்டியானது 10 முதல் 15 மிமீ அளவுக்கு உயர்த்தப்படும். 

பின்னர் பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள மின்காந்தத்தில் மின் உள்ளீட்டை குறுகிய நேரத்தில் மாற்றி மாற்றி அனுப்பப் படுவதால் காந்த இழுப்பு மற்றும் விலக்கு விசையின் மூலம் தொடர் வண்டியானது முன்னோக்கி உந்தி தள்ளப்படுகிறது. 

காந்த விசையின் அளவைப் பொறுத்து தொடர்வண்டி வேகமானது அமையும். EDS தொழில்நுட்பத்தைவிட இது அமைப்பது எளிதானது.
பூச்சிய வேகத்திலேயை இம்முறையின் மூலம் இரயிலை தரையில் இருந்து உயர்த்த முடியும். உருவாக்கச் செலவு அதிகம் மேலும் வேகம் அதிகரிக்கும் போது நிலைத்தன்மை குறையும்.

இதுவரை உருவாக்கப்பட்ட Transrapid MagLev தொடர்வண்டிகளுள் உச்சபட்ச வேகம் 500 கிமீ/மணி (311 மைல்/மணி).

மின்சத்தி தொங்குதல் (EDS)
மின்சத்தி தொங்குதல் - EDS
இது ஜப்பான் நாட்டில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பமாகும். EMS-ஐ விட இதுவே சிறந்த தொழில் நுட்பமாகக் கருதப்படுகிறது. 
Meissner Effect-ன் அடிப்படையில் செயல்படும் இவ்வகை தொடர் வண்டிகளில் நிலை காந்தங்கள், மின்காந்தங்கள் மற்றும் அதிமின் கடத்திகள் (Superconductors) ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன.

How Maglev Trains Work
ஒரு பொருளின் வெப்பநிலை அதன் Critical Temperature-ஐ விட குறைவான அளவை அடையும் போது (Superconductors) அது காந்தவிசைக் கோடுகளை விலக்கும் தன்மையைப் பெறுகிறது (Meissner Effect) என்ற தத்துவத்தின் அடிப்படையில் 

செயல்படும் இவ்வகை தொடர் வண்டிகளின் அடியில் இருக்கும் அதிமின் கடத்திகள் காந்த சக்தியினால் மேலே உயர்வதால் தொடர் வண்டியிலும் தரையி லிருந்து குறிப்பிட்ட அளவு மேலே உயர்கிறது. 

பின்னர் பக்கவாட்டில் அமைக்கப் பட்டுள்ள மின் காந்தத்தில் மின் உள்ளீடு மாற்றி மாற்றி அனுப்புவதன் மூலம் தொடர்வண்டி முன்னோக்கி தள்ளப்படுகிறது.

இவ்வகை தொடர்வண்டிகள் EMS-ஐ விட பாதுகாப்பானது,

அதிகநாள் செயல்படக் கூடியது.

எவ்வளவு வேகத்தில் சென்றாலும் நிலையாக செல்லக் கூடியது.

இருப்பினும் அதிக செலவு வாய்ந்தது.

ஒரு குறிப்பிட்ட அளவு வேகத்தை தாண்டிய பின்னரே தொடர் வண்டியை உயர்த்த முடியும்.
இதுவரை உருவாக்கப்பட்ட EDS தொடர்வண்டிகளில் உச்சபட்ச வேகம் 603 கிமீ/மணி ஆகும். ஆனால் இந்த தொடர்வண்டி 2027-ல்தான் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

ஏன் MagLev இரயில்கள்?
ஏன் MagLev இரயில்கள்?
இவ்வகை தொடர்வண்டிகள் தரையின் தொடர்பின்றி இயக்கப் படுவதால் உராய்வினால் ஏற்படும் ஆற்றல் இழப்பு தடுக்கப்படும்.

அடிக்கடி பழுது பார்க்கத் தேவையில்லை.

அதிவேக பயணம்.

ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தாது.

சாதாரண தொடர்வண்டிகளை விட பாதுகாப்பானது.

தகவல்கள் :
இந்தியாவில் புல்லட் இரயில்
ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக சுமார் 88000 கோடி செலவில் மும்பை- அகமதாபாத் வரையிலான புல்லட் இரயில் பாதை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மணிக்கு 1200 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய மீத்தடம் (Hyperloop) தொழில் நுட்பத்திற்கான ஆராய்ச்சிகள் எலான் மஸ்க்-ன் SpaceX நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
Tags:
Privacy and cookie settings