ராத்திரி நேரத்தில் ராணுவ வீரர் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருந்த மாமியார் - மருமகளை கொடூரமாக தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த 65 சவரன் நகையையும் அபேஸ் செய்து கொண்டு போயுள்ளனர்..
வீட்டில் பாட்டி, அம்மா சடலங்களுக்கு நடுவே 7 மாத குழந்தை இரவெல்லாம் அழுது கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை சிவகங்கையில் ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது முடுக்குரணி என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்த தம்பதி சந்தியாகு - ராஜகுமாரி.. சந்தியாகு ஒரு முன்னாள் ராணுவ வீரர்..
இவரது மகன் ஸ்டீபன்... இவரும் தற்போது ராணுவ வீரர்.. மனைவி, குழந்தை, மற்றும் அம்மாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தன் அப்பாவுடன் சேர்ந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு இரவு நேரத்தில் ஸ்டீபன் சென்றிருந்தார்.
அப்போது வீட்டில் ராஜகுமாரி, ஸ்டீபன் மனைவி, அவர்களது 7 மாத குழந்தையும் இருந்தனர், வீட்டிற்கு வெளியே ராஜகுமாரியும், சினேகாவும், குழந்தையும் வீட்டிற்குள்ளும் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்..
அப்போது, திடீரென சில மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்.. வெளியே தூங்கி கொண்டிருந்த ராஜகுமாரியை தலைகாணியை வைத்து அமுக்கி கொல்ல முயன்றனர்..
பிறகு ஒரு பெரிய இரும்பு ராடை எடுத்து வந்து கொடூரமாக தாக்கினர். இதில் ராஜகுமாரி துடிதுடித்து உயிரிழந்தார்.
பிறகு, வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த சினேகாவையும் இரும்பு ராடினால் கொடூரமாக தாக்கினார்கள்.. இதில் சினேகாவும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
அம்மாவின் சடலத்துக்கு பக்கத்தில் 7 மாத குழந்தை இரவெல்லாம் அழுது கொண்டே இருந்தது.. விடிந்ததும் தான் குழந்தையின் அழுகை சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்டது..
பதறி அடித்து கொண்டு ஓடிவந்து பார்க்கும் போது, 2 பேரும் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அலறினர். உடனடியாக, வயலுக்கு போன தந்தை-மகனுக்கு தகவல் சொன்னார்கள்..
தகவலறிந்து ராமநாதாபுரம் போலீசாரும் விரைந்து வந்தனர்.. வீட்டிற்குள் நுழைந்தவர்கள் யார் என்று தெரியவில்லை.. ஆனால் வீட்டில் 65 சவரன் நகையை திருடி கொண்டு போயுள்ளனர்..
இதை யடுத்து 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார், சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். விசாரணையை மோப்ப நாய் கொண்டு ஆரம்பித்துள்ளனர்...
தந்தை - மகன் ராணுவ வீரர்கள் 2 பேரும் சேர்ந்து, "வைகைப் பட்டாளம்" என்ற பெயரில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் கொரோனா நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர்..
இவர்களை ஏன் மர்மநபர்கள் கொன்றார்கள்? முன் விரோதமா தெரிய வில்லை.. ராணுவ வீரரின் வீட்டில் நடந்த இரட்டை கொலை, அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.