கடந்த 7 நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இனி வரும் நாட்களில் பாதிப்பு பெரிய அளவில் குறையும் என்கிறார்கள்.
தமிழகத்தில் இன்று 3965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை 134226 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 17989 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை நிலைமை
சென்னையில் கடந்த ஏப்ரல் 27 -ம் தேதியில் கொரோனா பாதிப்பு நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது.
மார்ச் மாதமே கொரோனா பாதிப்பு சென்னையில் வந்து விட்டாலும் கூட கடந்த ஏப்ரல் 27 -ல் தினமும் 100 -க்கும் அதிகமான கேஸ்கள் வந்தது.
அப்போது தான் சென்னையில் கோயம்பேடு கொரோனா பாதிப்பும் தொடங்கியது. அதன்பின் நிலைமை மோசமானது.
தினமும் 1200+ கேஸ்கள்
அதன்பின் சென்னையில் 1000 கேஸ்கள் கூட வர தொடங்கியது. மே இறுதியில் இருந்து தினமும் சென்னையில் 1000+ கேஸ்கள் வந்தது. அதிலும் ஜூன் மாதம் இறுதி வரை கூட தினமும் 1200+ கேஸ்கள் வந்தது.
கடைசியாக ஜூன் 10 -ம் தேதிதான் சென்னையில் 1200+க்கும் குறைவான கேஸ்கள் வந்தது. அதன் பின் தினமும் 1200+ கேஸ்கள் வந்தது.
மீண்டும் குறைகிறது
இந்தநிலையில் சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக தினமும் பாதிப்பு 2000க்கும் குறைவாக வருகிறது.
1800, 1700, 1500 என்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதிலும் கடந்த இரண்டு தினமாக சென்னையில் மீண்டும் 1200+ கேஸ்கள் மட்டுமே வந்துள்ளது. இன்று சென்னையில் இன்று 1185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு பின்
சென்னையில் சரியாக ஒரு மாதத்திற்கு பின் 1200+க்கும் குறைவான கேஸ்கள் வந்துள்ளது. சென்னையில் இதுவரைய 1200+ கேஸ்கள் வந்த நிலையில் 1 மாதம் பின் இப்படி கேஸ்கள் குறைந்துள்ளது.
இதனால் சென்னையில் கொரோனா கிராப் குறைய தொடங்கி உள்ளது என்கிறார்கள். சென்னை மொத்தமாக இதில் இருந்து வெளியே வர இன்னும் சில நாட்கள் ஆகலாம்.
என்ன நிலைமை
தமிழக அரசின் சரியான திட்டமிடல் தான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். மொத்தமாக மூன்று அடிப்படை திட்டங்களை தமிழக அரசு இதற்காக செயல்படுத்தியது குறிப்பிடத் தக்கது.
1. சென்னையில் அமல் படுத்தப்பட்ட தீவிர லாக்டவுன். 2. சென்னையில் வீடு வீடாக நடந்த சோதனை. 3. மக்களிடம் ஏற்படுதப்பாட்ட விழிப்புணர்வு.. 4 அறிகுறி உள்ளவர்களை தனிமைப் படுத்தியது.