தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்ப தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... இது அந்தந்த மாவட்ட மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியும் வருகிறது.
சமீப காலமாக சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.. ஒரு சில மாவட்டங்களில் வெயில் கொளுத்தவும் செய்கிறது.
தற்போது 4 மாவட்டங்களுக்கு மட்டும் மழை கனமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
வளிமண்டலத்தில் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இந்த கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
திருவள்ளூர், வேலூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்குமாம்..
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 13-ம்தேதி கடலோர கர்நாடக பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 15, 16ம் தேதிகளில் கர்நாடகா, கேரள கடலோர பகுதிகள்
மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்...
ஜூலை 13 முதல் 17 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப் படுகிறார்கள்.