கொரோனா வைரஸ் என்பது வெறும் பப்ளிசிட்டி என கூறி வந்த 37 வயதான அமெரிக்கர் ரிச்சர்டு ரோஸ் கொரோனாவால் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது.
ஆரம்பத்தில் சீனாவில் பரவும் வைரஸ் என கூறப்பட்டு வந்த நிலையில் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு சென்றவர்களால் இதுவரை 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்த வைரஸ் மனித இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் இந்த கொரோனா தாக்குதலால் 1.30 கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.
வைரஸ்
இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. இந்த வைரஸை கட்டுக்குள் வைத்திருக்கும் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இதில் சில நாடுகளின் மருந்துகள் பரிசோதனை கட்டத்தை எட்டி விட்டன. எனினும் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப் பூர்வமாக உறுதி செய்யப்பட வில்லை.
முகக் கவசம்
கொரோனா நம்மை தாக்காமல் இருக்க முகக் கவசமும் , அடிக்கடி கை கழுவுதலும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுமே ஆகும்.
இதைத் தான் உலக சுகாதாரம் வலியுறுத்தி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில் அதிபர் போல்சோனேரோ உள்ளிட்டோர் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் உலா வருகிறார்கள்.
தீவிர டிரம்ப்
இவர்களை பார்த்து பெரும்பாலானோர் முகக் கவசம் அணிவதில்லை. அது போல் டிரம்பை தனது காட்ஃபாதராக நினைத்து கொண்டு அவரை அப்படியே பாலோ செய்த ஒரு இளைஞர் கொரோனா வைரஸால் பலியாகி விட்டார்.
அமெரிக்காவின் ஓஹையோவைச் சேர்ந்தவர் ரிச்சர்டு ரோஸ்(37). இவர் ஒரு தீவிர டிரம்ப் ஆதரவாளர்.
ரிச்சர்டு ரோஸ் பலி
ராணுவ வீரரான ரிச்சர்டு கொரோனா வைரஸ் என்பது வெறும் விளம்பரத்திற் கான ஸ்டென்ட், நான் மாஸ்க் வாங்கி அணிய மாட்டேன் என தனது பேஸ்புக் பக்கத்தில் ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார்.
ஜூலை 1-ஆம் தேதி அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் பரிசோதனை செய்தார்.
அங்கு அவருக்கு கொரோனா உறுதியான நிலையில் ரிச்சர்டு கடந்த 4-ஆம் தேதி பலியாகி விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.