கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கிய சில நாட்களிலேயே நம்மிடம் பிரபலமானது ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் - Finger Pulse Oximeter.
இது நம் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு மற்றும் நாடித்துடிப்பின் அளவைக் கணக்கிடப் பயன்படும் சிறிய எலெக்ட்ரானிக் கருவி. கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால், உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு வெகுவாகக் குறையும்.
இயல்பாக உடலில் உள்ள மொத்த ஆக்ஸிஜனின் அளவு 95 -100 என்ற சதவிகிதத்தில் இருக்க வேண்டும்.
இந்த அளவு 80, 70 சதவிகிதமாக இருக்கும் பட்சத்தில், பாதிக்கப் பட்டவருக்கு நுரையீரல் நோய், ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், ரத்தச்சோகை, மாரடைப்பு அல்லது வேறு ஏதேனும் நுரையீரல், சுவாசப் பிரச்னைகள் இருக்கலாம்.
நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படாத Asymptomatic நிலையில் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்ட 14 நாள்களுக்குப் பிறகும் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது.
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள அறிகுறி இல்லாத தொற்றாளர்களுக்கு மருத்துவச் சிகிச்சை இல்லாமலேயே சரியாகி விடும்.
மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் அறிகுறி இல்லாத தொற்றாளர் களுக்கு உடலில் ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படும். அதைக் கண்காணிக்கவே இந்தக் கருவி பயன்படுகிறது.
பொதுமக்கள் பலரும் அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் இதை வாங்கத் தொடங்கி யுள்ளனர்.
இதன் தேவை அதிகரித்துள்ளதால் சில தரம் குறைந்த ஆக்ஸிமீட்டர் கருவிகளும் விற்பனை செய்யப் படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
கொரோனா டெஸ்ட் 'பாசிட்டிவ்' என்று வந்து தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப் பட்டவர்கள் ஆக்ஸிமீட்டர் வாங்கி வைத்து கொண்டு தினமும் பரிசோதித்து வருகிறார்கள்
கொரோனா டெஸ்ட் 'நெகட்டிவ்' என்று வந்து 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்கள் அந்த 14 நாள்களும் ஆக்ஸிமீட்டர் மூலம் உடலின் ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதித்து வருகிறார்கள்.
2000 முதல் 4000 ரூபாய் மதிப்பில் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.