ரேஷன் கடைகளில் நாளை முதல் இலவச முகக்கவசம் - முதல்வர் !

தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தயாராக இருக்குமாறு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. 
ரேஷன் கடைகளில் நாளை முதல் இலவச முகக்கவசம்

தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகள் மூலமாக குடும்ப அட்டையில் பெயர் உள்ள ஒருவருக்கும் தலா 2 முகக்கவசம் வீதம் கட்டணமின்றி வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் அனைத்து அமைச்சர்களிடம் தெரிவிக்கப் பட்டிருந்தது. 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுமார் 7 கோடி பேருக்கு தலா 2 முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை அந்த திட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி யிருக்கிறது. 

குறிப்பாக கூட்டுறவுத்துறை பதிவாளர் பாலசுப்ரமணியன் அனைத்து மண்டல இணைப்பதிவாளர் களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார். 
அதில் தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் விற்பனை முனைய கருவிகளில் ஒரு நபருக்கு 2 முகக்கவசம் அளிக்க வேண்டும் என்று மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. 

அதனை தொடர்ந்து அனைத்து நியாயவிலை கடைகளிலும் கட்டணமின்றி முகக்கவசம் வழங்கப்பட வேண்டும்.

மேலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அளிக்கப்படும் வழிமுறைகளை அனைத்து நியாயவிலை கடை ஊழியர்களும் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

குறிப்பாக முகக்கவசம் வழங்கும் போது இயந்திரத்தில் உரிய பதிவுகள் செய்து வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. 
நியாய விலை கடைகள் மூலமாக வருகின்ற 1ம் தேதி முதல் இலவச முகக்கவசம் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.
Tags:
Privacy and cookie settings