தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது
கல்விக் கட்டணம் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து முடிவெடுக்கலாம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்தது.
இந்த யோசனையை தமிழக அரசு ஏற்று கொண்டது. இதையடுத்து கல்விக் கட்டணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவெடுக்கும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மேலும் தற்போதைய சூழலில் 75% கல்வி கட்டணம் வசூலித்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும்,
அதாவது மூன்று தவணைகளாக கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப் பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பள்ளி கட்டணம் தாமதமாக செலுத்தினாலும் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது என்றும், ஊரடங்கு காலத்தில் 25%,
பள்ளிகள் திறக்கும் போது 25%, பள்ளிகள் திறந்து 3 மாதம் கழித்து 25% வசூலித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.