திருச்சி சிறுமி எரிப்பு... போஸ்ட் மார்ட்டத்தில் புது தகவல்?

எரித்து கொல்லப்பட்ட சிறுமி கங்காதேவியின் தலையில் காயம் இருந்ததாம்.. போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.. இதனால் சிறுமி சடலம் கிடந்த இடத்தில், அதிரடி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன, 
திருச்சி சிறுமி எரிப்பு

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அதவத் தூர்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி என்பவரின் 2வது மகள் கங்காதேவி.. 14 வயதாகிறது... 9வது முடித்து விட்டு 10-ம் வகுப்பு போக இருந்தார்.

இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு இவரது சடலம் முள்காட்டில் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.. போலீசார் கங்காதேவியின் உடலை கைப்பற்றினர், 
போஸ்ட் மார்ட்டம் செய்ய திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு போஸ்ட் மார்ட்டம் செய்தனர். அப்போது, பலாத்காரம் செய்து சிறுமி கொல்லப்பட வில்லை என்று ரிப்போர்ட் வந்தது.

இதையடுத்து, சிறுமியை கொன்றது யார் என்ற விசாரணையுடன், அவர் யாரிடம் கடைசியாக செல்போனில் பேசினார் என்ற ஆய்வும் மேற்கொள்ளப் பட்டது. 

அப்போ தான் 24 வயது சொந்தக்காரர் செந்தில் என்பவர் சிக்கினார். தான் விரும்பும் பெண், வேறு ஒருவருடன் போனில் பேசியதால், கண்டித்தேன், 

கன்னத்தில் அறைந்தேன், ஆனால் கொலை செய்யவில்லை என்றார். அதனால் கங்காதேவியை யார்தான் கொன்றார்கள் என்ற குழப்பம் இன்னமும் நீடித்து வருகிறது. 

இந்நிலையில், போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் இன்னொரு தகவலை தெரிவித்துள்ளார். கங்காதேவியின் பின்னந்தலையில் காயம் இருந்ததாக கூறுகிறார்.. 
ஆனால் இந்த காயம் எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை. எனவே போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் கார்த்திகேயன், சிறுமி எரிந்து பிணமாக கிடந்த இடத்தில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் போலீசாரும் இணைந்துள்ளனர்.

கங்காதேவியை கன்னத்தில் அறைந்த போது, கீழே மயக்கமாகி விழுந்து விட்டார் என்று ஏற்கனவே செந்தில் வாக்குமூலம் தந்திருந்தார்.. 

ஒருவேளை கீழே விழும் போது கல்லில் அடிபட்டு இறந்திருப்பாரா? அப்படி அடிபட்டு விழுந்திருந்தால், யார் மண்ணெண்ணை ஊற்றி கொன்றிருப்பார்கள் என்றும் கேள்வி எழுகிறது.

அல்லது கங்காதேவியே மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தி கொண்டால், நிச்சயம் வலி தாங்காமல் அங்குமிங்கும் அலறி ஓடியிருக்கவே செய்வார்.. 
ஆனால், அதற்கான தடயமும் எதுவும் இல்லை என்றும் சொல்கிறார்கள்.. இப்போது வரை கங்காதேவி எப்படி இறந்தார் என்றே தெரியாமல் ஒரே குழப்பமாக உள்ளது!
Tags:
Privacy and cookie settings