பஸ்ஸுக்கு பின்னாடி வந்த 35 வயது பெண்.. நிறுத்திய டிரைவர் !

"ப்ளீஸ்.. பஸ்ஸை நிறுத்துங்க" என்று கத்தி கொண்டே ஓடிவரும் ஒரு பெண்ணின் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பஸ்ஸுக்கு பின்னாடி வந்த 35 வயது பெண்

அவர் பெயர் பெயர் சுப்ரியா.. 30 வயதிருக்கும்.. கேரள மாநிலம் திருவல்லாவில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, வழக்கம்போல் வேலை மடிந்து சுப்ரியா வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.. அப்போது கண் பார்வையற்ற முதியவர் ஒருவர் பஸ் ஏற முடியாமல் தவித்து கொண்டிருந்தார்.
இதை பார்த்த சுப்ரியா முதியவரிடம் எங்கே போகணும் என்று கேட்கவும், பத்தனம் திட்டாவில் உள்ள மஞ்சடிக்கு போக வேண்டும் என்று அந்த முதியவர் சொல்லி உள்ளார்.

அதனால் தான் பஸ் ஸ்டாண்டுக்கு பெரியவரை கைப்பிடித்து அழைத்து வந்து கொண்டிருந்தார்.. அப்போது, திருவல்லா போக கூடிய பஸ் ரோட்டில் மெதுவாக சென்று கொண்டிருப்பதை பார்த்ததும்,
நிறுத்திய டிரைவர்

"பஸ்ஸை நிறுத்துங்க" என்று கத்திக் கொண்டே ஓடிப்போய் நிறுத்தி உள்ளார். மூச்சிறைக்க இவர் ஓடி வருவதை பார்த்ததும் கண்டக்டரும் பஸ்ஸை நிறுத்தி விட்டார்.. 

அதன் பிறகு தான் தகவலை சொல்லி கண்டக்டரிடம் சொல்லி, திரும்பவும் மூச்சிறைக்க ஓடிப்போய் முதியவரின் கையை பிடித்து கொண்டு வந்து பஸ்ஸில் ஏற்றி விட்டார் சுப்ரியா.
இதை அங்கிருந்த வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஜோஷ்வா என்பவர் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளார்.. 

அது இப்போது வைரலாகி வருகிறது. ஏராளமானோர் இந்த ரியல் "ஹீரோ" பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லி வருகிறார்கள்!
Tags:
Privacy and cookie settings