ஸ்வப்னாவுடன் ரகசியம்... வாய் திறக்காத சரித்.. துருவும் போலீஸ் !

டிப்டாப் ஸ்வப்னா", 10வது கூட படிக்கவில்லை என்ற குண்டை தூக்கி போட்டுள்ளனர் அவர் குடும்பத்தினர்.. இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் யாராலும் மீளவே முடியவில்லை.. 
சரக்கு விமானம் மூலம் பார்சல்

இதற்கு நடுவில் ஸ்வப்னாவுடன் சேர்ந்து தங்க கடத்தலில் ஈடுபட்ட சரித் வாயே திறக்க வில்லையாம்.. போலீசார் எப்படி எப்படியே பேசி விசாரித்தும் போதுமான அளவுக்கு தகவல்ளை திரட்ட முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. 

அதனால், சரத் - ஸ்வப்னாவும் செல்போனில் இதுவரை என்ன வெல்லாம் பேசினார்கள் என்பதை ஆய்வு செய்யும் பணி முடுக்கிவிடப் பட்டுள்ளது.
ஸ்வப்னாவின் கடத்தல் இந்த அளவுக்கு செல்லும் என்று யாருமே எதிர் பார்த்திருக்க முடியாது.. கேரள மாநில அரசியலையே அசைத்து பார்த்து வருகிறது.. 

ஐக்கிய அரசு அமீரக துணை தூதரக முகவரிக்கு சரக்கு விமானம் மூலம் பார்சல் வந்த அட்டை பெட்டியால் இவ்வளவும் வெளி உலகத்துக்கு வந்துள்ளது.

ஸ்வப்னாவுடன் சேர்ந்து தங்கத்தை ரகசியமாக கடத்தியது அவருடன் இருந்த நண்பர் சரித் என்பவர்.. அந்த பார்சலை வாங்க வந்தது சரித் தான்.. 

அதனால் அவர் தான் அதிகாரிகளிடம் முதலாவதாக சிக்கியவர்.. சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது தான், 

அந்த நபர், தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் என்பதும், ஏற்கனவே இப்படித் தான் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக வேலையை விட்டு தூக்கியவர் என்பதும் தெரிய வந்தது.
தூதரகத்தின் பெயரைச் சொல்லி மோசடி செய்ததில், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளராக இருந்த ஸ்வப்னா பெயரை கக்கியதும் இவர் தான்! 
அரபு எமிரேட் தூதரகத்திற்கான பார்சல்

வழக்கமாக ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்திற்கான பார்சல்களை எடுத்து போக சரித் தான் தொடர்ந்து விமான சரக்குப் பிரிவுக்கு வந்து போயுள்ளார்.. அப்போது, விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடனும் பழக்கமாகி உள்ளார்.
சுங்கத்துறை அதிகாரிகள் சரித்தை பிடித்து விசாரிக்கும் போதே, கேரள தலைமைச் செயலகத்தி லிருந்து சரித்தை தப்ப வைக்க சிலர் முயற்சி செய்ததாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் மற்றொரு பக்கம் குற்றஞ்சாட்டி வருகின்றன.. 

சரித் திருவல்லத்தை சேர்ந்தவர்.. அதனால் சரித்தின் வீடுகளில் சுங்க அதிகாரிகளால் சோதனை நடத்தினர்.. அங்கிருந்து சில ஆவணங்களையும் கண்டுபிடித்தனர்..

தற்போது தீவிர விசாரணைக்கு சரித் உட்படுத்தப் பட்டுள்ளார்.. ஆனால் அதிகாரிகள் கேள்விக்கு சரியாக சரித் ஒத்துழைக்க வில்லையாம்.. இன்று மதியம் வரை ஒரு தெளிவான பதிலையும் தரவில்லையாம்.. 

மேலும் சரித்தின் செல்போன் பேச்சும் ஆய்வு செய்யப்பட்டு, அதை அடிப்படையாக வைத்து சரித்திடம் விசாரிக்கப்பட்டது.. அதற்கும் எந்த தகவலையும் சரித் தெளிவாக கூறவில்லை.. 

தற்போது, 14 நாள் ரிமாண்ட் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.. மேலும் சரித் - ஸ்வப்னாவும் செல்போனில் பேசிய பேச்சுக்கள் அனைத்துமே ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
துருவும் போலீஸ்

இப்போது, ஸ்வப்னா எங்கே என்று தெரியவில்லை.. ஏற்கெனவே குற்ற வழக்கு ஸ்வப்னா மீது நிலுவையில் உள்ள நிலையில், அரசின் ஐடி துறையில் எவ்வாறு வேலை வழங்கப்பட்டது என கேள்வி எழுந்து வருகிறது.. 

மற்றொரு பக்கம், ஸ்வப்னா 10வது தான் படித்துள்ளார் என்ற குண்டை தூக்கி போட்டுள்ளனர்.. அப்படி என்றால், இத்தனை ஆபீஸ்களில் இவருக்கு எப்படி வேலை கிடைத்தது? 
அதற்கு யார் உடந்தை? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ தங்கத்தை மேலும் பரிசோதித்து சோதனை களுக்கு உட்படுத்தப்பட உள்ளது.. 

அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகளால் இந்த தங்கத்தின் தூய்மை, எடை மற்றும் அளவும் பரிசோதித்து பதிவு செய்யப்பட உள்ளது.. இந்த தங்கம் இப்போது சுங்க துறையின் லாக்கரில் வைக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings