இதயத்தில் ஓட்டை இருப்பதை வெளிக்காட்டும் முக்கிய அறிகுறிகள் !

உடலில் இதயம் மிகவும் முக்கியமான உறுப்பு. ஒருவரது இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் இரத்தம் தங்கு தடையின்றி சீராக கிடைத்து, உடலுறுப்புக்கள் ஆரோக்கியமாக செயல்படும். 
இதயத்தில் ஓட்டை இருப்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்

ஆனால் தற்போது இதய பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. பலர் இதய நோயால் உயிரிழக்கின்றனர். 

அதிலும் இதயத்தில் ஓட்டை போன்ற பிறவியுடன் தோன்றக்கூடிய இதய நோய்கள் பற்றி அறிந்து கொள்வதால் அந்த நிலையை எளிதாக கையாள முடியும். 
இவ்வித பாதிப்புகள் பற்றி தக்க சமயத்தில் உணர முடிவதால் மற்றும் அதன் அறிகுறிகளை தெரிந்து கொள்வதால் அதற்கு தகுந்த சிகிச்சையை உரிய நேரத்தில் பெற முடியும்.

ஏட்ரியல் செப்டல் குறைபாடு
ஏட்ரியல் செப்டல் குறைபாடு
ஏட்ரியல் செப்டல் குறைபாடு (Atrial Septal Defect/ASD) என்பது ஒருவரின் இதயத்தின் இரண்டு மேல் அறைகளுக்கு இடையில் செப்டம் என்னும் சுவரில் உண்டாகும் ஒரு துளை என அறியப்படுகிறது. 

இந்த நிலை பிறக்கும் போதே உண்டாகிறது என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும். சிறிய பாதிப்புகள் பெரிய பிரச்சனைகளை உண்டாக்குவ தில்லை. 
மேலும் குழந்தை பருவத்தில் அல்லது பிள்ளைப் பருவத்தில் இந்த ஓட்டை தானாக மறையக்கூடிய வாய்ப்பு உண்டு.

பெரிய துளையால் சந்திக்கும் பிரச்சனைகள்
பெரிய துளையால் சந்திக்கும் பிரச்சனைகள்

செப்டம் துளையின் வழியாக அதிக அளவு இரத்தம் நுரையீரல் வழியாக செல்லும் வாய்ப்பு உண்டாகிறது. இந்த துளையின் அளவு பெரிதாகும் போது மோசமான பாதிப்புகள் ஏற்படலாம். 

அந்த நபரின் இதயம் மற்றும் நுரையீரல் சேதமடையலாம். பெரிய பாதிப்புகள் ஆயுட்காலத்தை குறைக்கலாம், இதயத்தின் வலது பக்கம் செயலிழக்கலாம், இதயத்துடிப்பில் அசாதாரண நிலை உண்டாகலாம்.

முக்கிய அறிகுறிகள்
முக்கிய அறிகுறிகள்
மூச்சுத்திணறல், சோர்வு, கால்களில் வீக்கம் , வயிறு, கால் பாதம், இதயம் போன்றவை படபடப்பாக இருப்பது போன்றவை இதன் அறிகுறிகளாகும். 
இத்தகைய சிவப்பு கொடி, அதாவது எச்சரிக்கை அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு
வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு

மற்றொரு குறைபாடு வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு (Ventricular Septal Defect/VSD) இதுவும் பிறப்பிலேயே இதயத்தின் இருக்கும் ஒரு துளை. 

வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு ஒரு பெரிய சிக்கலை உண்டாக்குவ தில்லை மற்றும் பல சிறிய VSD பாதிப்புகள் தானாகவே மூடிவிடுகின்றன. 

மிதமான அளவு மற்றும் பெரிய அளவு துளைகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுவதால் பல்வேறு சிக்கல்கள் தடுக்கப்படுகின்றன.

அறிகுறிகள்
அறிகுறிகள்
VSD-க்கான அறிகுறிகள், வேகமாக மூச்சு விடுவது அல்லது மூர்ச்சையாவது, சோர்வு, எடை அதிகரிக்காமல் இருப்பது, மூச்சுத்திணறல் போன்றவையாகும். 
இந்த அறிகுறிகள் உங்கள் குழந்தைக்கு இருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்லவும். இந்த துளைகள் திறந்து இருக்கும் நிலையை நிலைத்த நாளத் தமனி (Patent Ductus Arteriosus/PDA) என்று கூறுவர்.

டெட்ராலஜி ஆஃப் ஃபால்லோட் (Tetralogy Of Fallot/TOF)
டெட்ராலஜி ஆஃப் ஃபால்லோட் - Tetralogy Of Fallot

குழந்தைகளுக்கு அல்லது வளரும் பிள்ளைகளுக்கு PDA பாதிப்பு அதிகமாகும் போது டெட்ராலஜி ஆஃப் ஃபால்லோட் (Tetralogy Of Fallot/TOF) என்ற பாதிப்புக்கு அழைப்பு விடுக்கப் படுகிறது. 

இந்த நிலையில் பிறக்கும் போது இதயத்தில் நான்கு ஒருங்கிணைந்த பாதிப்புகள் காணப்படுகின்றன. இதனால் இதய கட்டமைப்பு பாதிக்கப் படுகிறது. 

இது ஆக்சிஜன் குறைவான இரத்த ஓட்டத்தை இதயம் மற்றும் உடலின் உறுப்புகளுக்கு வழங்க வழிவகுக்கிறது.

எச்சரிக்கை அறிகுறிகள்
எச்சரிக்கை அறிகுறிகள்
TOF பாதிப்பு உள்ளவர்களுக்கு உடல் உறுப்புகளுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தால் சருமம் நீல நிறத்தில் காணப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் அறிகுறிகள் வேறுபடலாம். 
ஆனாலும் குழந்தைகளுக்கு உண்டாகும் பொதுவான அறிகுறிகள் நீல நிற சருமம், மூச்சுத் திணறல், மயக்கம், நீண்ட நேரம் அழுவது, எரிச்சல் உணர்வு போன்றவையாகும்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் குழந்தை மேலே கூறிய அறிகுறிகளை வெளிப்படுத்தினால், உடனடியாக அவனை/அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சரியான சிகிச்சையைத் தொடங்குங்கள். 

பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக பிறக்கும் போதே இதய நோய்கள் இருக்கும் குழந்தைகள் பலருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை பெற இயலாமல் போகும் நிலை உண்டாகிறது.
ஆகவே பெற்றோர்கள் இந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் விழிப்புடன் இருந்து மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட பரிசோதனைகளை குழந்தைக்கு செய்து, பாதிப்பை கண்டுணர வேண்டும். 

குழந்தைகள் பெரியவர்களாக ஆன பின்பும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டப்படுகிறது. எனவே பாதிப்பை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம்.
Tags:
Privacy and cookie settings