மதுரையில் காளைமாடு ஒன்று தனக்கு நெருக்கமான பசுமாட்டை துரத்தி சென்ற சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. மதுரை அருகே பாலமேடு பகுதியை சேர்ந்த காளைமாடு மஞ்சமாலி.
இந்த மாடு அங்கு இருக்கும் பாலமேடு கோவிலில் வளர்ந்தது. அதே கோவிலில் இன்னொரு பசுமாடான லட்சுமி வளர்ந்தது. இந்த இரண்டு மாட்டையும் அங்கு இருந்த முனியாண்டி என்ற நபர் வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் அந்த மாடுகளை வளர்த்து வந்த முனியாண்டி கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கஷ்டப்பட்டு இருக்கிறார்.
அதிலும் லாக்டவுன் காரணமாக மிக அதிகம் கஷ்டப்பட்டு இருக்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளார்.
இதை அடுத்து தான் வளர்த்த அந்த இரண்டு மாடுகளில் பசுமாடு லட்சுமியை விற்க முடிவு எடுத்துள்ளார். இதை யடுத்து அந்த லட்சுமி மாட்டை நேற்று முனியாண்டி வேறு ஒரு நபருக்கு விற்றார்.
அவர் இந்த மாட்டை வாங்கி செல்ல வந்த போதுதான் அந்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. இந்த பசுமாட்டை முதலில் டெம்போவில் ஏற்றி இருக்கிறார்கள்.
இதை பார்த்ததும், லட்சுமியை விற்க போகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட அந்த காளைமாடு வேகமாக அந்த டெம்போவை துரத்தி இருக்கிறது.
அந்த டெம்போ பின்னாடி வேகமாக சென்ற அந்த காளை மாடு, முன்னே சென்று டெம்போவை மறித்து உள்ளது. அதன்பின் பின்னே இருந்த லட்சுமியிடம் சென்று காளை மாடு கண்ணீர் விட்டு அழுது உள்ளது.
இந்த சம்பவம் எல்லாம் வீடியோவாக பதிவாகி உள்ளது. அந்த காளை கண்ணீரோடு, அந்த பசுமாட்டை துரத்தி சென்றுள்ளது.
சுமார் 1 கிமீ தூரத்திற்கு அந்த காளை, அந்த டெம்போவை துரத்தி சென்றுள்ளது. அதன்பின் வண்டியை துரத்த முடியாமல் நின்று விட்டது .
இந்த சம்பவம் அங்கே இருந்தவர்களை கலங்க வைத்துள்ளது. அதே போல் இந்த சம்பவம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது .