வாழ வேண்டிய வயசில் ஒரு இளைஞர் அநியாயமாக இறந்து போய் விட்டார்.. தன்னுடைய குடும்பம் வறுமையில் உள்ளதால், தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ரெடி செய்து விட்டு,
தூக்கு போட்டு தற்கொலையும் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது பாத்திமா நகர்.. இங்கு வசித்து வந்தவர் சதீஷ்குமார்.. இவருக்கு 19 வயதாகிறது.. அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் காலேஜில் ஐடிஐ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 18-ம் தேதி இவர் வீட்டில் ஏதோ பிரச்சனை வெடித்துள்ளது.. சதீஷ்குமாரை அவரது அப்பாவும், அண்ணனும் சேர்ந்து திட்டியதுடன் அடித்தும் உள்ளனர்..
இதனால் மனம் உடைந்த சதீஷ்குமார், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் வீட்டில் உள்ள வறுமையை நன்றாக உணர்ந்திருந்தார்.
யாருக்கும் தன்னால் எந்த செலவும் வந்து விடக்கூடாது என்று, தன் படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை தயார் செய்ய முடிவு செய்தார்..
அதற்காக அந்த போஸ்டரை தன் செல்போனிலேயே டிசைன் செய்து அதனை தன்னுடைய நண்பர்கள் 4 பேருக்கு வாட்ஸ்ஆப் அனுப்பினார்..
அதன் பிறகு தலைமறைவாகி விட்டார். இந்த போஸ்டரை பார்த்த நண்பர்கள், உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் சொன்னார்கள்.. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினரும் சதீஷ்குமாரை தேட ஆரம்பித்தனர்..
எங்கெங்கோ தேடியும் சதீஷ்குமார் கிடைக்கவே இல்லை. அடுத்தநாள், மழவராயன்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் பிணமாக கிடந்தார்.
அங்கிருக்கும் பலா மரத்தில் சதீஷ்குமார் சடலமாக தொங்கி கொண்டிருந்தார்.. இதை பார்த்து குடும்பத்தினர் அலறி துடித்தனர்..
அதற்குள் தகவல் அறிந்த விஏஓ, போலீசாருக்கு தகவல் சொல்வும், அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தனர்..
இதை யடுத்து தற்கொலைக்கு காரணமான சதீஷ்குமாரின் அப்பா, இ அண்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை டிசைன் செய்து தற்கொலையும் செய்து கொண்ட இந்த சம்பவம் ஆலங்குடியில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.