செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ இதய வர்மன் மற்றும் அவரது தந்தை லட்சுமிபதி, திருப்போரூர் செங்காடு கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இதே ஊரைச் சார்ந்த இமயம் குமார் என்பவரின் குடும்பத்தின ருக்கும், எம்.எல்.ஏ இதய வர்மன் குடும்பத்தின ருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், அங்குள்ள 350 ஏக்கர் நிலம் சென்னை சார்ந்தவர் களுக்கு இமயம் குமார் வாங்கி கொடுத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று இமயம் குமார் தனது கூட்டாளிகள் மற்றும் ரவுடிகளுடன் அந்த நிலத்தை பார்வையிட வந்த நிலையில், இந்த விஷயத்தை அறிந்த எம்,எல்,ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதில், இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் இரு தரப்பிற்கும் இடையே
கைகலப்பு ஏற்பட்டு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், பாதுகாப்புக்காக இமயம் குமாரின் காரை நோக்கி எம்.எல்.ஏ துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தங்களின் விசாரணை அதிரடியாக துவக்கியுள்ளனர்.
இடத்தகராறு தொடர்பான பிரச்சனையில் வாய்த்தகராறு முற்றி இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்போரூர் எம்.எல்.ஏ, அவரது தந்தையும் துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளனர். கோஷ்டி மோதல் தொடர்பாக இதுவரை 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
கோஷ்டி மோதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
விரைவில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப் படுவார்கள் என்று திருப்போரூர் எஸ்பி கண்ணன் பேட்டி அளித்தார்.