மேற்கு வங்கத்தில், 15 வயது சிறுமியை மிக கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.. இதை கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் இறங்கியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
மேற்கு வங்காள மாநிலம் சோப்ரா என்ற பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 15 வயசாகிறது.. 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.. இவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இதை கண்டித்து உள்ளூர் மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
நிலைமை எல்லை மீறி போய் விட்டதை யடுத்து, போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்..
ஆனாலும் மக்கள் சமாதானம் ஆகவில்லை.. போலீஸ் ஜீப்புகளுக்கு தீ வைத்து விட்டனர்.. அதனால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மேலும் கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டு, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது... அதனால் இப்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்..
ஆனால் சிறுமியை பலாத்காரம் செய்த அந்த கும்பல் எங்கே என்று தெரியவில்லை.. அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் மக்கள் செய்த கலவரத்தினால், அந்த இடமே போர்க்களம் போல காட்சி யளித்தது. தற்போது அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் இருக்கிறது.