ஏய் வாய மூடு.. அமைச்சர் மகனை.. லெப்ட் ரைட் வாங்கிய பெண் போலீஸ் !

"ஷ்ஷ்ஷூ... வாயை மூடு.. நீ யாரா இருந்தா எனக்கு என்ன" என்று லாக்டவுனில் ஊரை சுற்றி வந்த மினிஸ்டர் மகனை லெப்ட் & அண்ட் ரைட் வாங்கி விட்டார் ஒரு பெண் போலீஸ்.. இது சம்பந்தமான வீடியோவும் வைரலாகி வருகிறது.
லெப்ட் ரைட் வாங்கிய பெண் போலீஸ்

குஜராத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானி.. இவரது மகன் பிரகாஷ் கனானி... கடந்த புதன்கிழமை இவர் காரில் ஊரை சுற்றி வந்துள்ளார்.. 

அந்த காரில் நண்பர்களும் இருந்துள்ளனர்.. லாக்டவுன் விதிகளை மீறி, ரொம்ப நேரமாக சுற்றிக் கொண்டு இருக்கவும், அந்த காரை வாகன போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணை மேற்கொண்டது சுனிதா என்ற பெண் போலீஸ்.. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், 'நான் யார் தெரியுமா?.. எம்எல்ஏ மகன்' என்றார்.. 

உடனே சுனிதா, "நீ யாரா வேணும்னாலும் இருந்துட்டு போ.. எம்எல்ஏ மகன்-ன்னா, உனக்கு கொரோனா வராதா? லாக்டவுனில் இப்படி தேவையில்லாமல் வெளியே ஊர் சுற்றுவது குற்றம்னு தெரியாதா? என்று கேட்டார்.

சுனிதா இப்படி கேட்டதும் பிரகாஷூக்கு இன்னும் கோபம் வந்து விட்டது.. உடனே தன் போனை எடுத்து அப்பாவிடம் பேசினார்.. நடந்ததை எல்லாம் படபடவென சொன்னார்.. 

உடனே நேர்ல கிளம்பி வருமாறும் தன் அப்பாவுக்கு உத்தரவு போட்டார்.. பிரகாஷ் தொடர்ந்து சுனிதாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் மிரட்டினார்.. ஆனால் எதுக்குமே சுனிதா அசரவே இல்லை.. "கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்? 
இந்த நேரத்தில் பிரதமர் மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்.. 12 மணி வரை டியூட்டிக்கு நிற்கும் நாங்கள் என்ன முட்டாளுங்களா? உங்கள் இஷ்டத்துக்கு ஊரை சுற்றுகிறீர்களே" என்றார்.

இதற்கு பிரகாஷ், "உன்னை 365 நாளும் இதே இடத்தில் நிற்க வைப்பேன்" என்றார்.. அதற்கு சுனிதா,"நான் உன் வீட்டு வேலைக்காரி இல்லை, 

உனக்கு அடிமையும் இல்லை" என்று சொல்லி, ஸ்டேஷனுக்கு விஷயத்தை சொன்னார். ஆனால், இன்ஸ்பெக்டரோ, "அவங்களை அங்கேயே விட்டுட்டு ஸ்டேஷனுக்கு வந்து சேருங்க" என்று சொன்னார்.

இதனிடையே, இந்த சம்பவத்தைதான் அங்கிருந்த யாரோ வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விட்டனர்.. இதற்கு சுனிதாவுக்கு பாராட்டு மேல் பாராட்டு கிடைத்து வருகிறது.. 

பிரகாஷுக்கு கண்டனம் மேல் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவத்துக்கு பிறகு சுனிதா தலைமை காவல் நிலையத்துக்கு உடனே டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். 

சுனிதாவை ஏன் டிரான்ஸ்பர் செய்தீர்கள் என்று கேள்விகள் அடுத்தடுத்து சோஷியல் மீடியாவில் எழ ஆரம்பித்தன.. ஆனால், சுனிதா தனது வேலையை ராஜினாமாவே செய்து விட்டதாக தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.. 
கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி அவரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings