கொரோனா சமயத்திலும் யூ-டியூப் மூலம் கோடி கணக்கில் சம்பாதித்து இளைஞர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் பல விதமான தொழில்கள் பாதிக்கப் பட்டுள்ளது.
எது எப்படி இருந்தாலும், இந்த சமயத்திலும் பல லட்சங்கள் சம்பாதிக்கும் சாதனை யாளர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
அந்த வகையை சேர்ந்தவர் தான் இந்தியாவில் பிறந்து துபாயில் செட்டிலான இளைஞர் கவுரவ் சவுத்ரி.
யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் கவுரவ் சவுத்ரி புதிய மொபைல்கள் சந்தைக்கு வரும் அன்றே அந்த போன் குறித்த விமர்சனங்களை தனது யூ டியூப் சேனல் மூலம் வெளியிட்டு வருகிறார்.
இவரின் விமர்சனங்களை கேட்க பலலட்சம் பேர் உள்ளனர். இதுவரை இவரது சேனலை 35 லட்சம் சந்தாதாரர்கள் பின்தொடர்கின்றனர்.
இதன் மூலம் மாதம் 20 லட்சம் ரூபாய் வரை கவுரவ் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யூ டியூபில் சம்பாதித்த பணத்தை வைத்து சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கி யிருக்கிறார் கவுரவ் .
அதிலும் காரில் தனக்கான மாறுதல் களையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் கேட்டு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.