கேரள விமான விபத்து நடந்ததற்கு மனிதர்கள் செய்த தவறு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள் .
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து 184 பயணிகளை ஏற்றிக்கொண்டு கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு 7.30 மணி அளவில் வந்து சேர்ந்தது.
அந்த விமானத்தில் 7 விமான பணியாளர்களும் இருந்தனர். இந்த விமானத்தை விமானி தரை இறக்க முயற்சித்த போது மழையின் காரணமாக இந்த விமானம் சறுக்கிக் கொண்டு சென்று அங்கு இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது,
இதில் அந்த விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் துணை விமானி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரிழந்தார்.
170 பயணிகள் மீட்கப்பட்ட நிலையில் 45 பயணிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது , இந்த விமான விபத்தில் பதினோரு பேர் பலியாகி விட்டனர்.
இந்த விபத்திற்கு காரணம் விமானம் தரையிறங்கும் போது பெய்த கன மழையே காரணம் என சொல்லப்படுகிறது. விமானம் சறுக்கிக் கொண்டே கீழே பள்ளத்தில் விழுந்த வேகத்தில் இரண்டாகப் பிளந்து விட்டது.
இதில் விமானிகள் இருந்த பகுதி மற்றும் விமானத்தின் முன் பகுதியை மிகவும் சேதம் அடைந்தது.
இந்த விமானம் தரையிறங்கும் போது கனமழை பெய்த காரணத்தினாலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ள காரணத்தினாலும் இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக விமானி விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து வானிலை பற்றிய தகவல் தெரிவிக்கப்படும் அது போல் விமானியும் விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருப்பார்.
அவ்வாறு விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு தகவல் கொடுப்பதில் மனித தவறு நடந்திருக்கலாம் என்று என்று கூறினர் என்றாலும் இது குறித்து விசாரணைக்கு பின்னரே உண்மை என்ன வென்று தெரியவரும்.
மேலும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மூன்று தினங்களாக கடுமையான மழை கொட்டி வருகிறது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Thanks for Your Comments