பணத்தை சுத்தம் செய்ய வாஷிங்மெஷினில் போட்ட நபர்... நஷ்டத்தில் முடிந்த ஐடியா !

கொரோனா வைரஸ் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த வைரஸ் உலகிற்கு புதியது என்பதால், இது குறித்த முழுமையான விழிப்புணர்வு இதுவரை மக்களுக்கு கிடைக்கவில்லை. 
பணத்தை சுத்தம் செய்ய வாஷிங்மெஷினில் போட்ட நபர்... நஷ்டத்தில் முடிந்த ஐடியா !

கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க தங்களால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுகிறோம். 
அதே போல் பொருட்களின் மீது உள்ள தொற்றை அகற்றுவதற்கு கிருமிநாசினி பயன்படுத்துகிறோம். 

ஆனால் தென் கொரிய நபர் ஒருவர் பணத்தை சுத்திகரிக்க செய்த செயல் இறுதியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கொரோனா அச்சத்தால் பணத்தை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும் என அதனை வாஷிங் மெஷினில் போட்டுள்ளார். இதன் மூலம் பணத்தில் கிருமிகள் இருந்தால் அதனை நீக்க முடியும் என நினைத்துள்ளார். 

இதற்காக 50 ஆயிரம் வான் (சுமார் ரூ.3,100) பணத்தை உள்ளே போட்டுள்ளார். உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் இந்தப் பணம் அவருக்கு கிடைத்துள்ளது.

ஆனால் அவர் நினைத்தது போல் நடக்கவில்லை. பணம் வாஷிங் மெஷினில் ஒரு சுற்று சுற்றிய பிறகு முழுமையாக சேதமடைந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அதனை எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் அதன் அதிக சேதம் காரணமாக அதனை மாற்ற முடியாது என ஊழியர்கள் கூறி விட்டனர். 

பணத்தை வாஷிங் மெஷினிலோ, மைக்ரோவேவனிலோ வைக்க வேண்டாம் என வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 
பணத்தை எப்படி கிருமிநீக்கம் செய்வது என்பது தொடர்பாக வழிகாட்டுதல்கள் போதிய அளவில் இல்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings