உலக கப்பல் போக்குவரத்து வரலாற்றிலேயே காலத்தால் அழிக்க முடியாத சம்பவமாக கருதப்படுவது இந்த டைட்டானிக் கப்பல் விபத்து.
கடந்த
1912 -ம் ஆண்டு ஏப்ரல் 14 -ந் தேதி இரவு 11.40 மணிக்கு மிகப்பெரிய பனிப்பாறையில் மோதி
டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே விபத்திற்குள்ளானது.
1912, ஏப்ரல் 15-ம் தேதி, அதிகாலை 2:20 மணிக்கு அதாவது இரண்டரை மணி நேரத்தில் டைட்டானிக் கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது. இந்த கோர சம்பவத்தில், 1,500 -க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கியும், கடல் நீரின் குளிர்ச்சி தாங்காமலும் உயிரிழந்தனர்.
டைட்டானிக்
கப்பல் விபத்திற்கு காரணமாக பல விஷயங்கள் அமைந்து விட்டன. அதை பற்றியே இந்த செய்தியில் காணலாம்.
டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் உயரிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டதால், அது மூழ்க வாயப்பில்லாத கப்பலாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இந்த சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
அந்த
காலத்தின் உலகின் மிகப்பெரிய உல்லாச கப்பல் என்ற பெருமையை தட்டி சென்றது இந்த டைட்டானிக்.
இந்த கப்பல் 882.5 அடி நீளமும், 92.5 அடி அகலமும், 175 அடி
உயரமும் கொண்ட பிரம்மாண்டமான கப்பல். இந்த பிரம்மாண்ட கப்பலில் பயணிக்க ஆவலோடு வந்த பயணிகள்,
மற்றும் பணியாளர்களை நடுக்கடலில் தத்தளிக்க விட்டு பல
உயிர்களையும் காவு வாங்கியது.
டைட்டானிக்
கப்பல் செல்லும் வழித்தடத்தில் பனிப்பாறையானது மிக அருகில் இருப்பது தெரிய
வந்தததும், கப்பலை இயக்கிய கமாண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த
கப்பலுக்கும்
பனிப்பாறைக்கும் இடையே 37 வினாடி அளவுக்கே நேரம் இருந்தது, என்பதை
கால்குலேட் செய்த டைட்டானிக் கப்பலின் தலைமை அதிகாரி மூர்டோச், கப்பல்
எஞ்சினை ரிவர்ஸ்
முறையில் இயக்குவதற்கு உத்தரவு போட்டார்.
மேலும் கப்பல் செல்லகூடிய திசையையும் மாற்ற
கூறினார். அதுவும் பலனளிக்காமல் போகவே, கப்பல் பனிப்பாறை மீது மோதி விபத்தில்
சிக்கி கொண்டது.
டைட்டானிக்
கப்பலில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 2,200 பேர் இருந்தனர். அவர்கள்
அனைவரும் தப்பிச் செல்வதற்கு போதுமான எண்ணிக்கையில் உயிர் காக்கும் படகுகள் அந்த
கப்பலில் இல்லை.
கப்பல் விபத்துக்குள்ளான பிறகு தான் இந்த அதிர்ச்சி தரும்
விஷயமானது அம்பலமானது. பெண்களுக்கும்,
சிறுவர்களுக்கும் முன்னுரிமை என்ற அடிப்படையில் உயிர் காக்கும் படகுகள்
இயக்கப்படும்.
அதே நேரத்தில், பலருக்கும் உயிர் காக்கும் படகுகளில்
தப்புவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது.டைட்டானிக் கப்பலில் இருந்து சென்ற
உயிர் காக்கும் படகுகள் குறைவான பயணிகளுடன் கரையை நோக்கி சென்றன.
டைட்டானிக்
கப்பலில் இருந்த 7 -ம் எண் என்ற உயிர் காக்கும் படகில் 65 பேர் செல்ல முடியும்.
ஆனால், 24 பேர் மட்டுமே அந்த படகில் ஏறி தப்பி இருக்கின்றனர்.அதே போன்று, 1 -ம் எண் படகில் 40 பேர் செல்ல முடியும்.
ஆனால், 7 பணியாளர்களும், 5 பயணிகளும்
என்று குறைவான பயணிகளுடன் கரையை நோக்கி சென்றன. கப்பலில் தத்தளித்த பலருக்கும் உயிர் காக்கும்
படகில் ஏறி தப்புவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது.
இதற்கு காரணம் டைட்டானிக்
கப்பல் மூழ்கிய தினத்தன்று, உயிர் காக்கும் படகுகளில் எப்படி தப்பிப்பது என்பது குறித்த
செயல்முறை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆபத்து சமயத்தில்
எந்த இடத்தில் பயணிகள் கூட வேண்டும்; அங்கிருந்து உயிர் காக்கும் படகுகளில்
எவ்வாறு ஏறி தப்பிக்க வேண்டும் என்பது குறித்த செயல்விளக்க நிகழ்வாக இருந்தது.
ஆனால்,
கடைசி நேரத்தில் அந்த செயல் விளக்க நிகழ்ச்சியை கப்பலின் கேப்டன் ஸ்மித்
ரத்து செய்து விட்டார்.
ஒரு வேளை, அந்த செயல்விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தால், அதிக பயணிகள்
விழிப்புணர்வோடு செயல்பட்டு தப்பி இருக்க முடியும்.
துரதிருஷ்டவசமாக இந்த செயல்விளக்க நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால், பலர் உயிர் காக்கும்
படகுகளில் ஏறி எவ்வாறு தப்புவது என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்
உயிரை விட்டனர்.
டைட்டானிக் கப்பலின் கேப்டன் ஸ்மித் செய்த தவறுகளில் ஒன்றாக
இது பார்க்கப்படுகிறது. டைட்டானிக்
கப்பல் மிகப்பெரிய ஆபத்தில் இருப்பதை காட்டும் விதத்தில் வானில் விளக்கு ஒளியை
செலுத்தி அருகில் இருந்த பிற கப்பல்களிடம் உதவி கோரப்பட்டது.
இந்த விளக்கு ஒளியை கண்ட அருகில் இருந்த கர்பாதியா என்ற கப்பல்
உதவிக்கு வந்தது. இதற்கு சிறிது
தொலைவில் கலிஃபோர்னியன் என்ற கப்பலும் சென்றுள்ளது. ஆனால், அந்த கப்பலின்
கேப்டன் தூங்கி இருக்கிறார்.
அன்றைய இரவு 12.45
மணிக்கு கலிஃபோர்னியன் கப்பல் பணியாளர்கள் கேப்டனை எழுப்பி பிற கப்பலுக்கு ஆபத்து என்ற விளக்கு ஒளி குறித்து சொல்லி இருக்கின்றனர்.
ஆனால்,
கலிஃபோர்னியன் கப்பலின் கேப்டன் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எந்த உத்தரவும்
பிறப்பிக்கவில்லை.
மேலும், கப்பலில் இருந்த வயர்லெஸ் ஆபரேட்டரும்
தூங்கி விட்டதால், டைட்டானிக் கப்பலில் விடுக்கப்பட்ட எந்த ஒரு அழைப்புகளுக்கும் பலன் இல்லாமல் போனது.
அதே நேரத்தில்,
கர்பாதியா கப்பல் கடலில் தத்தளித்த பல பயணிகளையும் காப்பாற்றி தன்னுடைய கப்பலில்
ஏற்றிக் கொண்டது.
இந்த கர்பாதியா கப்பல் போன்று, கலிஃபோர்னியன் கப்பலும் உரிய நேரத்தில் உதவிக்கு
வந்திருந்தால், நிச்சயம் ஏராளமான பயணிகளை காப்பாற்றி இருக்க முடியும்.
டைட்டானிக்
கப்பல் விபத்தில் சிக்கியதற்கு பின் கடலில் மிதந்த உடல்களை மீட்கும் நோக்கில்
5 நாட்கள் கழித்து அமெரிக்காவின்
ஹலிஃபேக்ஸ் என்ற இடத்தில் இருந்து விபத்து பகுதிக்கு மெக்கே - பென்னெட் என்ற
கப்பல் அனுப்பப்பட்டது.
அந்த
கப்பல் உடலை பதப்படுத்துவதற்கான எம்பாம்பிங் செய்வதற்கான வசதிகளையும், 40
எம்பாம்பிங் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பணியாளர்களையும் கொண்டிருந்தது. மேலும் பல டன்
ஐஸ் கட்டிகள் மற்றும் 100 சவப்பெட்டிகளும் எடுத்துச் செல்லப்பட்டன.
இந்த மெக்கே -
பென்னெட் கப்பல் மூலமாக 306 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அதில், 116
பேரின் உடல்கள் மிக மோசமாக சிதைந்து விட்டதால் அவர்களை அடையாளம் காண்பதற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
உடல்களை மீட்பதற்கு கூடுதல் கப்பல்களும்
அனுப்பப்பட்டன. மொத்தமாக
கடலில் மிதந்த 328 பேரின் உடல்கள் மட்டுமே விபத்து பகுதியிலிருந்து மீட்கப்பட்டன.
அதில், 119 பேரின் உடல்கள் மோசமாக சிதைந்து விட்டதால், கடலிலேயே புதைக்கப்பட்டன. அவற்றை
எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டதாக மருத்துவக் குழு தெரிவித்து விட்டது.
இப்படி டைட்டானிக்
கப்பல் விபத்தானது மிகப்பெரிய சோகமாக அமைந்தது. ஆனால், கப்பலில் இருந்த சில
விஷயங்கள் முகம் சுழிக்க வைப்பதாகவே இருந்தது.
இவ்வளவு பிரம்மாணடமான கப்பலில் வெறும் 20 உயிர் காக்கும் படகுகளே இருந்தது. எனவே 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர்.
இந்த கப்பலில் மூன்றாம்
வகுப்பில் பயணம் செய்யக்கூடிய 700 பயணிகளுக்கு இரண்டு பாத் டப் மட்டுமே
கொடுக்கப்பட்டு இருந்தது. முதல் வகுப்பில் பயணம் செய்த பயணிகளுக்கு மட்டுமே
தனி குளியலறை வசதி இருந்தது.
மேலும் இந்த டைட்டானிக்
கப்பல் இங்கிலாந்து தபால் துறையின் அதிகாரப்பூர்வமான அஞ்சல்
போக்குவரத்து கப்பலாகவும் இருந்தது.இந்த கப்பலில் தபால் நிலையம் ஒன்றும்
செயல்பட்டு வந்தது.
அந்த தபால் நிலையத்தில் 2 இங்கிலாந்து பணியாளர்களும், 3
அமெரிக்க பணியாளர்களும் இருந்தனர். இந்த
பணியாளர்கள் 3,423 கோணிப்பைகளில் எடுத்துச் செல்லப்பட்ட 7 மில்லியன்
கடிதங்களை கையாண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இதுவரை நடந்த
டைட்டானிக் கப்பல் தேடுதல் பணிகளில் ஒரு கடிதம் கூட கைப்பற்றப்படவில்லை
என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த கடிதங்கள் அனைத்தும் அமெரிக்காவில் டெலிவிரி
செய்ய எடுத்துச் செல்லப்பட்டன.
டைட்டானிக்
கப்பல் மூழ்கி 73 ஆண்டுகளுக்கு பின்னர் 1985 -ம் ஆண்டு செப்டம்பர் 1 -ந் தேதி
டாக்டர் ராபர்ட் பல்லார்ட் என்ற அமெரிக்க கடல் ஆராய்ச்சியாளர் மூழ்கி
கிடந்த டைட்டானிக் கப்பலை முதல் முறையாக கண்டறிந்தார்.
டைட்டானிக் கப்பல், கடல் மட்டத்திலிருந்து 12 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ளது. அந்த கடல் பகுதி யுனெஸ்கோ அமைப்பின் பாதுகாக்கப்பட்ட இடமாக
அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் நாம் டைட்டானிக்
சினிமாவில் கண்ட விலை மதிக்க முடியாத நீல வைரக்கல் ஒன்று கடலில்
மூழ்குவதாக காட்டப்பட்டது. அது கற்பனையாக சேர்க்கப்பட்ட காட்சி மட்டும் தான்.
அதே நேரத்தில், டைட்டானிக் கப்பலில் இருந்து ஏராளமான ஆபரணங்கள் மற்றும் அரிய
பொருட்கள் கைப்பற்றப்பட்டு, பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டதும்
குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments