என்னோட எல்லா குணமும் வீணாகுது.. லெட்டர் எழுதி குழந்தையை கொன்ற பெண் !

"என்கிட்ட இருக்கிற எல்லா நல்ல குணமும் வீணாயிட்டு வருதே.. என்னை கோமாளியா நினைக்கிறாங்களே" என்று லெட்டர் எழுதி வைத்து விட்டு 
லெட்டர் எழுதி குழந்தையை கொன்ற பெண்

ஒரு பெண் குழந்தையுடன் சேர்ந்து ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி... இவருக்கு 30 வயதாகிறது.. டைல்ஸ் ஒட்டும் கூலி தொழிலாளி. மனைவி பெயர் புவனேஸ்வரி.. 
25 வயதாகிறது. கல்யாணமாகி 6 வருஷங்கள் ஆகின்றன.. இளவரசி 5, நிகிதா 3, தபிதா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளன.. தபிதா 9 மாத குழந்தை.

கடந்த 26ம் தேதி புவனேஸ்வரி, தபிதாவை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என கண்டுபிடிக்க முடியவில்லை.. 

அவரை தேடி அலைந்தபோதுதான், ஆவடி அடுத்த சேக்காடு ஏரியில் புவனேஸ்வரியின் சடலம் மிதந்தது. அந்த சடலத்தை மீட்ட போலீசார் குழந்தையின் சடலத்தை தேடினர்.. 

ஆனால் கிடைக்கவே இல்லை.. இதையடுத்து விசாரணையும் ஆரம்பமானது.. அப்போது, புவனேஷ்வரி எழுதிய ஒரு லெட்டரை கைப்பற்றினர்..

அதில் "என்கிட்ட இருக்கிற எல்லா நல்ல குணமும் வீணாயிட்டு வருது.. என் பிரச்சனைகளை மறக்கணும் என்று தினமும் கடவுளை வேண்டுகிறேன்... 

ஆனால் எல்லாரும் என்னை கோமாளியா நினைக்கிறாங்க.. என் பிரச்சினைக்கு நல்ல முடிவு கொடுக்க வேண்டுகிறேன்... அதனால்தான் சாக போகிறேன்" என்று எழுதியிருந்தார்.
எதனால் புவனேஸ்வரி இந்த முடிவு எடுத்தார் என தெரியவில்லை.. குடும்ப தகராறு காரணமாக இருக்கும் என்கிறார்கள். 

குழந்தையை ஏரியில் வீசி கொன்று, அதற்கு பிறகு அவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சேறு நிறைந்த அந்த ஏரியில் செடி, கொடிகள் இருப்பதால், அங்கு எங்காவது குழந்தை சிக்கி இருக்கலாம் என்று நினைத்து, இரவெல்லாம் தேடினர்... 
விடிந்ததும் போலீசார் ட்ரோன் கேமரா மூலமும் தேடினர். அப்போது தான் ஏரிக்கு நடுவில் தபிதா சடலம் மிதந்தது தெரிந்தது.. இதை யடுத்து அந்த சடலத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings