காற்றை வெளியேற்றி தொப்பையை குறைக்கும் சுவாச பயிற்சி !

0
உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் சுவாசப் பயிற்சி மூலமாக சுவாசப் பிரச்சினைகள், அதிக உடல் எடை, மூச்சுத்திணறல் ஆகிய பிரச்சனைகளை எளிதில் கடந்து விட முடியும்.  
தொப்பையை குறைக்கும் சுவாச பயிற்சி !
நாம் அனைவரும் மேலோட்டமான சுவாசங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம்.  இதன் காரணமாக நுரையீரல் சிறந்த திறனுடன் செயல்படாமல் குறைந்த அளவு காற்றை மட்டுமே உள்ளே செலுத்துகிறது. 

இதனால் நம்முடைய மன ஆரோக்கியமானது பாதிப்படைகிறது. நாம் எப்பொழுதுமே முறையாக சுவாசிப்பது இல்லை. 

அதாவது நாம் ஏனோதானோவென்று காற்றினை உள்ளே செலுத்துவதாலும் வெளியேற்றுவதாலும் வயிற்றுக்குள் காற்று தங்கி விடுகிறது.  

அப்படி காற்றானது வயிற்றில் தங்கி விடும் போது தொப்பை உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றது.  

ஆழ்ந்த முறையான சுவாசம் இல்லாத காரணத்தால் நிறைய பிரச்சினைகள் ஏற்படும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.  நாம் ஆழ்ந்து சுவாசிக்கும் போது அது உடலில் உள்ள மன அழுத்தத்தை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.  

மேலும் நீங்கள் ஆழ்ந்த சுவாசத்தை பயிற்சி செய்யும் பொழுது அது உண்மையிலேயே உங்களுடைய மூளையினை அமைதிப்படுத்துகிறது. 

எனவே நாம் அனைவரும் சுவாசப் பயிற்சி செய்வது என்று ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் இருந்த இடத்திலேயே செய்யக்கூடிய பயிற்சிகள் அதிக அளவில் நிறைய இருக்கின்றன.  

உங்களுடைய எடையை குறைக்க வேண்டும் என்று நீங்கள் மூச்சுப்பயிற்சி செய்வதாக இருந்தால் தரையில் அமர்ந்து தான் செய்ய வேண்டும்.  

எப்பொழுதுமே நாம் தரையில் அமரும் பொழுது நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்.  இந்த மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது நீங்கள் முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி உட்கார வேண்டும். 
சுவாச பயிற்சி
அப்படி மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது முதலில் வாயை மூடிக் கொண்டு மூக்கின் வழியாக 4 வினாடிகள் சுவாசிக்க வேண்டும்.  அடுத்து இதனையே அதிகப்படுத்தி 7 வினாடிகள் என்று சுவாசியுங்கள்.  

உங்களை நீங்கள் கஷ்டப்படுத்தி கொள்ளாமல் லேசாக அமைதியான முறையில் செய்யுங்கள்.  அடுத்து 8 வினாடிகள் வாயின் வழியாக சுவாசிக்கவும்.  

இப்படி நீங்கள் இந்த சுவாச பயிற்சியினை குறைந்த பட்சம் மூன்று முறை செய்யவும்.  இப்படி செய்யும் போது நீங்கள் சௌகரியமாக உணரும் நேரத்தில் இந்த எண்ணிக்கையை அதிகப் படுத்திக் கொள்ளலாம்.  

நீங்கள் இரண்டு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்து உங்களுக்கு ஆழ்ந்த சுவாசப் பழக்கத்தினை உண்டாக்க இது ஒரு பயிற்சியாக இருக்கும்.  

இப்படி இந்த பயிற்சியை செய்யும் போது இது கொஞ்சம் கொஞ்சமாக முழு பிராணாயாமம் செய்வதற்கு ஏதுவாக அமையும்.  

இந்த சுவாச பயிற்சியின் நீங்கள் அதிக நன்மைகளைப் பெற வேண்டுமானால் மாற்று நாசி சுவாசப்பயிற்சினை நீங்கள் செய்யலாம்.  இப்படி ஆழ்ந்த சுவாசம் செய்யும் போது ஆக்ஸிஜன் அளவு உடலில் அதிகரிக்கிறது.  
பிராணாயாமம்
இதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிக சிறந்ததாக அமைகிறது. நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட இந்த சுவாச பயிற்சி அதிக அளவில் உதவுகிறது.  

இந்த பயிற்சியை தினமும் செய்து உங்களை நீங்களே உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.  இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ள நோயாளிகள் சுவாசப் பயிற்சி செய்வது மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.  

எனவே இந்த சுவாசப்பயிற்சினை தினசரி மேற்கொள்ளுங்கள்.  இதனை சரியாக தெரிந்து கொண்டு செய்தால் அதிக அளவு பலனைப் பெற முடியும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings