கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வேகமாக திரும்பி வருகிறது.
இருந்தாலும் கொரோனா வந்து விடுமோ என்ற அச்சம் மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது.
இதனால் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் முகக்கவசம்முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் எனவும் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
இதனால் முகக்கவசம் ஆனது தலைக்கவசம் போன்று உயிர்க்கவசம் ஆக மாறி இருக்கிறது இது குறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் :
இன்னும் கொரோனா முடிவடையாத நிலையில் மதுரையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டன மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். இதனால் நெரிசல் காரணமாக சிக்னல்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கிறது.
இதன் காரணமாக மதுரை மீண்டும் நெரிசல் மிக்க நகரமாக மாறிவிட்டது. இதில் கவனிக்க வேண்டியது வெளியில் செல்வோரில் ஒரு பகுதியினர் முககவசம் அணிவது கிடையாது.
சிலர் அணிந்திருந்தாலும் அதனை சரியாக அணிவதில்லை. இதனால் கொரோனா வேகமாக பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே மக்கள் அலட்சியம் காட்டாமல் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
நாம் அணியக்கூடிய முகக்கவசமானது மூக்கு மற்றும் வாய் பகுதி சரியாக மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசத்தினை பயன்படுத்தி விட்டு அதனை குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
துணி முககவசம் என்றால் வெளியில் சென்று வந்தவுடன் அதனை சோப்பு நீரில் போட்டு அலச வேண்டும். ஒருவர் குறைந்த பட்சம் நான்கு முக கவசங்களை பயன்படுத்த வேண்டும்.
நம்மையும் பிறரையும் காப்பதற்கு கட்டாயமாக கவசம் அணிவது சிறந்த வழி எனவே மக்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஐந்து மாதங்களுக்கு முகக் கவசம் அணிந்த படி செல்வதே நல்லது இவ்வாறு அவர் கூறினார்.
Thanks for Your Comments