ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள லெவாஷி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த 4 அடி நீளம் கொண்ட பாம்பை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
வழக்கமாக வீட்டின் முற்றத்தில் உறங்கும் பழக்கம் கொண்ட அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் ஏதோ ஒன்று நெளிவதைப் போன்று உணர்ந்த அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றினுள்ளே ஏதோ ஒரு உயிரினம் இருப்பதை உறுதி செய்து அதை எண்டோஸ்கோபி உதவியுடன் வெளியேற்ற முடிவு செய்தனர்.
அதே போன்று அறுவை சிகிச்சை அறையில் அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் எண்டோஸ்கோப்பி கருவியை செலுத்தி அந்த உயிரினத்தை வெளியே இழுத்தனர்.
அப்போது தான் அது பாம்பு என்பதை மருத்துவர்கள் அறிந்து கொண்டனர். இந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்கு முன் அந்தப் பாம்பு நான்கு அடியை கொண்டதாக இருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த காட்சியினை அங்கே பணியில் இருந்த மற்றொரு மருத்துவர் வீடியோ எடுத்து வெளியிட்டு சமூக வலைதளங்களில் அது வேகமாக பரவி வருகிறது.
இது நமக்கெல்லாம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அந்தப் பகுதியில் இது வழக்கமாக நடப்பது தான் என்று கூறுகிறார்கள் அந்த கிராம மக்கள்.
In Dagestan, a snake crawled into a woman's stomach pic.twitter.com/E9o7scJxfr
— WeirdRussia.com (@weirdrussia_com) August 31, 2020
Thanks for Your Comments