சென்னையில் பாடம் புரியாததால் மாணவர் தற்கொலை !

1 minute read
0

சென்னையில் உள்ள மேடவாக்கம் பகுதியில் புஷ்பா நகரைச் சேர்ந்த செல்வம்  இவருடைய மகன் கார்த்திக் வயது 14.  இவர் செம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். 

மாணவர் தற்கொலை !
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு ஆன்லைனில்  பாடம் நடத்தப்பட்டு வருகின்றது.
ஆனால்  மாணவர் கார்த்திக்கு ஆன்லைனில் நடத்தப்படும் பாடம் புரியாததால் நான் பள்ளியிலேயே சென்று படுத்துக் கொள்கிறேன் என்று பெற்றோரிடம் கூறி வந்ததாக தெரிகிறது. 

இந்த சூழ்நிலையில் கார்த்திக்கை ஆன்லைனில்  படிக்க சொல்லி விட்டு பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டனர். 

பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது  கார்த்திக் வீட்டின் அறையில்  தூக்குப் போட்டு  தற்கொலை செய்து கொண்டது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. 

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு மற்றும்  போலீசார்  மாணவர் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.  இந்த விசாரணையில் நேற்று மதியம் ஆன்லைனில் தேர்வு நடந்ததாக தெரிய வந்தது. எனவே சரியாக தேர்வு எழுத அதனால் மனமுடைந்த அல்லது 

ஆன்லைன் வகுப்பில் ஆசிரியை யாராவது கோபமாக பேசியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது 

சிக்கன் டிக்கா பார்பிகியு செய்முறை

ஆன்லைனில் நடக்கும் பாடம் புரியாததால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா  என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் போலீசார் கார்த்திக் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி  விசாரித்து வருகின்றனர்

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 16, April 2025
Privacy and cookie settings