விமானத்தில் கொரோனாவுக்கு சவால் விடும் தொழில்நுட்பம் !

0

பயணம் என்பது ஒவ்வொருத்தருக்கும் மறக்க முடியாத நினைவையும், புதுமையான அனுபவத்தையும் கொடுக்கும். பயணம் செய்யும் முறை மாறி வந்தாலும், பயணம் செய்தது போதும் என நினைப்பவர் யாரும் இல்லை.

விமானத்தில் தொழில்நுட்பம் !
இந்த நிலையில் பயணம் செய்ய பஸ், ரெயில், கார், மோட்டார் சைக்கிள் என அனைத்து விதமான பயணங்களும் அனைவருக்கும் ஏற்ற வகையில் கிடைக்கிறது. 

இவற்றில் வான்வழி செல்லும் விமான பயணம் மற்றவற்றை விட அபாயகரமானது என்ற எண்ணம் இருந்து வருகிறது.  

விமானம் எப்படி பறக்கிறது தெரியுமா ...

ஆனாலும் விமானங்களில் சிறு இடத்தில் பலர் மிக அருகில் அமர வைக்கப்படுவர். மேலும் விமானத்தினுள் காற்றோட்டத்திற்கான வசதியும் இருக்காது. 

இதனால் விமானத்தில் பயணம் செய்யும் ஒருவருக்கு சளி, இருமல் இருந்தால்,  அது மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் அதிகம் உண்டு. ஆனால் இதில் துளியும் உண்மையில்லை என்பதை விவரிக்கிறது இந்த செய்தி.

விமானங்களின் கேபின்களில் 3 நிமிடங்களுக்கு ஒரு முறை சுத்தமான காற்று நிரப்பப்படுகிறது என அறிவீர்களா? ஆம், விமானம் பறக்கும் போது, வெளிப்புறத்தில் இருக்கும் சுத்தமான காற்று விமானத்தினுள் கலக்கப்படுகிறது. 

விமானம் நிற்கும் போது கழிவறை ...

வெளிப்புற காற்று பயணிகள் கேபினை வந்தடையும் முன் அதிக வெப்பநிலை உடையட கம்ப்ரெசர், ஓசோன் ப்யூரிபையர் உள்ளிட்ட சாதனங்கள் வழியாக  சுத்தப் படுத்தப்பட்டு அதன் பின்பே அது கேபினுள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. 

இந்த வழிமுறை 2 முதல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இவ்வாறு காற்றை சுத்தப்படுத்த ஹெச்.இ.பி.ஏ. ஏர் பில்ட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அதாவது மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுவதற்கு இணையான தரம் கொண்ட ஏர் பில்ட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அனைத்து விதமான வைரஸ் மற்றும் கிருமிகள் 99.97 சதவீதம் வரை கொல்லப்படுகிறது. 

கொரோனாவுக்கு சவால் விடும் தொழில்நுட்பம் !

இத்தகைய தரமுற்ற காற்று மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அறைகளில் இருப்பதற்கு இணையானவை ஆகும். இத்தனை சுத்தமான காற்று விமான பயணிகளுக்கு ஏன் அச்சுறுத்தலை ஏற்படுத்த போகிறது.

கேபின்களில் சுத்தமான காற்று எந்நேரமும் வந்து போக செய்வதுடன், விமான நிறுவனங்கள் விமானத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து செய்கின்றன. 

ஹரிசான் ஹைப்ரிட் விமானம்

அந்த வகையில், மற்ற போக்குவரத்து முறைகளை விட விமான பயணம் மிகவும் பாதுகாப்பானது ஆகும். 

என்ன தான் தொழில்நுட்ப வசதிகள் நம் பாதுகாப்பை உறுதி செய்தாலும், தனிமனித ஒழுக்கம், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது, முகக்கவசம் அணிவது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதே நம் பாதுகாப்பிற்கு சிறந்த பலனை தரும்.

விமானத்தின் உள்ளே சுவாசிப்பது எப்படி?
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings