சில சமயங்களில் நாம் தூங்கும் பொழுது அல்லது தூக்கத்திலிருந்து விழித்து எழும் பொழுது நம் கைகள் மரத்து போனது போன்றதொரு உணர்வினை அனுபவித்து இப்போம்.
மேலும் சிலருக்கு கைகளில் உணர்வு இல்லாத நிலையும் சிலருக்கு ஊசி வைத்து குத்தியது போன்ற உணர்வும் இருக்கும் இப்படிப்பட்ட உணர்வை மருத்துவர்கள் ப்ரெஸ்தேசியா என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதில் சில காரணங்களுக்காக நாம் பயப்படத் தேவையில்லை. அதே சமயத்தில் சில அறிகுறிகள் நமக்குத் தரும் எச்சரிக்கை மணியாகும்..
மேலும் கை மரத்துப் போவதற்கான காரணங்களும் அதனை தடுக்கும் முறைகள் மற்றும் குணப்படுத்தும் முறைகளைப் பற்றி இந்த செய்தியில் நாம் காண்போம் ...
கைகளில் அழுத்தம் கொடுப்பது....
பொதுவாகவே நாம் ஒவ்வொருவரும் தூங்கும் பொழுது தலையணை இருந்தாலும் கைகளின் மேல் நம்முடைய தலையை வைத்து அழுத்தம் கொடுத்து தூங்குவது என்பது ஒரு பொதுவான பழக்கம் ஆகும்.
இப்படி அவர் தூங்கும் பொழுது கைகைகளிலுள்ள நரம்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் அந்த நரம்புகள் தற்காலிகமாக செயல் இழக்க செய்கிறது.
இந்த நரம்புகள் தான் நம்முடைய மூளையிலிருந்து ஏனைய உறுப்புகளுக்கும் மேலும் உறுப்புகளிலிருந்து மூளைக்கும் கட்டளைகளை எடுத்துச் செல்லும் ஒரு கடத்தி ஆகும்.
இவை செயல் இழந்து போவதால் தகவல் பரிமாற்றத்தில் பல தடைகள் ஏற்படும் இதனாலேயே நம்மால் கைகளை உணர முடிவதில்லை.
ஆனால் உணர்வு வந்ததும் நாம் நம்முடைய கைகளை தூக்கும் பொழுது விர்ரென்று இரத்தமானது நரம்புகளுக்குள் பீச்சி அடிக்கும் அந்த சமயத்தில் நம்முடைய கைகள் உணர்ச்சியை பெறுகிறது.
இதனால் நாம் நம்முடைய கைகளில் உணர்வினை பெறுகிறோம் இது எப்படி ஏற்படுகிறது என்றால் நம்முடைய கைகளுக்கு ரத்தமானது செல்வதால் அவை மூளைக்கு தகவலை அனுப்புகிறது. இதனால் நாம் மறுபடியும் பணியை செய்ய முடிகிறது ...
மணிக்கட்டில் உணர்ச்சியின்மை ...
சில சமயங்களில் நம்முடைய கைகளில் உள்ள மணிக்கட்டுப் பகுதி கூட மரத்துப் போகின்றது.
இதற்கு காரணம் மணிக்கட்டின் முன்பகுதியில் உள்ள குறுகலான சுரங்கம் போன்ற ஒரு அமைப்பின் வழியாக செல்லும் நரம்பானது அழுத்தப்படுவதால் ஏற்படுகிறது.
இந்த நிகழ்விற்கு நம்முடைய கைகளுக்கு அதிக அசைவு உள்ள வேலையை தொடர்ந்து கொடுப்பது.
அதாவது தொடர்ச்சியாக தட்டச்சு செய்வது போன்ற சில வேலைகளை செய்வதால் இந்த உணர்வு ஏற்படலாம். அதே சமயத்தில் கருவுற்ற பெண்கள் இந்தத் தன்மையை உணரக்கூடும்.
சர்க்கரை நோய்/ சர்க்கரை வியாதி...
சர்க்கரை வியாதி அல்லது சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு நரம்புகள் சேதாரம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதனை சர்க்கரை வியாதியால் வரும் நரம்பியல் பிரச்சினை அல்லது இதனை ஆங்கிலத்தில் diabetic neuropathy என்றும் அழைக்கிறார்கள்.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இது நரம்பு முனைகளை சிறிது சிறிதாக சேதப்படுத்துகிறது.
சர்க்கரை வியாதி உள்ள பெரும்பாலானவர்களுக்கு கால்கள் மற்றும் அதன் பாகங்கள் மரத்துப் போக வாய்ப்புகள் அதிகம். சில சமயங்களில் அவர்களின் கைகள் கூட பாதிப்படையலாம்.
விட்டமின் பி குறைபாடு ...
விட்டமின் என்பது அனைவருக்கும் தேவையான ஒரு முக்கியமான சத்துப் பொருள் ஆகும். ஆனால் அதிலும் விட்டமின் பி ஆனது ஒருவருக்கு மிகவும் இன்றியமையாத ஒரு சத்தாகும்.
இந்த விட்டமின் பி குறைந்தால் ஒருவருக்கு உடலில் நிறைய பிரச்சனைகள் உண்டாகின்றன. அதிலும் இந்த விட்டமின் பி வகையில் உள்ள விட்டமின் பி12 நம்முடைய நரம்புகள் மற்றும் மூளை இயங்குவதற்கு ஒரு இன்றியமையாத சத்துப் பொருள்..
இது குறைந்தால் ரத்த சோகை மற்றும் கை கால் முனைகளில் ஒருவித கூச்ச உணர்வு போன்ற மரத்துப்போகும் தன்மை ஏற்படும்.
பொதுவாக தூக்கத்தில் நாம் கொடுக்கும் அழுத்தத்தால் ஏற்படும் மரத்துப்போகும் தன்மைக்கும் விட்டமின் டி குறைபாட்டினால் வரும் மரத்துப்போகும் தன்மைக்கும் எந்த ஒரு வித்தியாசத்தையும் நம்மால் உணர முடியாது.
இந்த விட்டமின் டி குறைபாடு பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இதய நோய் உள்ளவர்களுக்கும் ஆசனவாய் பிரச்சினை உள்ளவர்களுக்கும் பொதுவாக ஏற்படுகிறது.
தண்டுவட மரப்பு நோய்..
தண்டுவட மரப்பு நோய் அல்லது Multiple sclerosis என்பது மூளை மற்றும் முதுகுத்தண்டு நீர் மூடியுள்ள கொழுப்பான மயிலின் உறையில் ஏற்படும் நோயாகும் ..
கைகள் மரத்துப் போதல் என்பது தண்டுவட மரப்பு நோயின் முதல் அறிகுறி என்று அமெரிக்காவில் உள்ள தேசிய தண்டுவட மரப்பு நோய் கூட்டமைப்பு ஆய்வு சொல்கிறது .
இந்த மரத்துப் போகும் தன்மையானது எந்த இடத்தில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை பொறுத்து கைகளிலும் கால்களிலும் உணர்ச்சியற்ற தன்மையினை ஏற்படுத்தும். இந்த மரப்பு தன்மையானது பொதுவாக முகத்திலும் ஏற்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
இந்த கைகள் மரத்துப்போகும் நிகழ்வினை நம்முடைய வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்வதன் மூலமாக தடுக்க முடியும்.
பொதுவாக தூக்கத்தில் கைகளுக்கு அழுத்தம் கொடுத்து தூங்குவதை தவிர்ப்பது, சரியான உடற்பயிற்சியினை மேற்கொண்டு கை மற்றும் மணிக்கட்டு பகுதிகளை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உணவினை பொருத்தவரை விட்டமின் பி சத்து அதிகமாக உள்ள உணவினை எடுத்துக் கொள்வது நல்லது.
மருத்துவரை அணுகுவது எப்போது..
நம்முடைய கைகளுக்கு உணர்வற்ற தன்மை அடிக்கடி வந்தாலோ அல்லது பார்வை மற்றும் பேசுவதில் குறைபாடு
முகத்தில் உணர்வற்ற தன்மை நடக்கும் போது ஒரு ஒழுங்கற்ற தன்மை மற்றும் புரிந்து கொள்ள முடியாத ஒரு வலி உணர்வு
இவை அனைத்திலும் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நன்று.