பிச்சை எடுத்தாலும் பிச்சை போட்டாலும் குற்றம் என்று இலங்கையில் அறிவிக்கப் பட்டுள்ளது.
புதிய அறிவிப்பு குறித்து கொழும்புவில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் துறை டிஐஜி அஜித் ரோஹனா, ‘கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் முக்கிய நகரங்களில்
வர்த்தக நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது (The number of beggars for commercial purposes has increased.).
தினசரி சம்பளத்தின் அடிப்படையில் சிலர் பிச்சை எடுக்கின்றனர் (Some people beg on the basis of daily wage.). நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் உள்ள சிக்னல்களில் பிச்சை எடுப்பதால் அதிக நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் முக்கிய நகரங்களில், பிச்சை எடுத்தாலும், பிச்சை போட்டாலும் அது தண்டனைக்கு உரியக் குற்றம்.
பிச்சை எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் (Strict action will be taken against beggars) என்றும் அவர் அறிவித்துள்ளார்.
Thanks for Your Comments