மகாராஷ்டிரா அரசோடு ஒப்பிடும் போது பாலிவுட் மாஃபியா கும்பல் நல்லவர்களாகத் தெரிகிறார்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து, கங்கனா ரணாவத்தின் மும்பை பாலி ஹில்ஸில் உள்ள அவரது அலுவலகத்தில் 14 சட்ட விதி மீறல்கள் இருப்பதாகக் கூறி அலுவலகம் இடிக்கப்பட்டது. இதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தன.
பின்னர் மதரீதியான வெறுப்பைத் தூண்டுவதாக நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் இருவர் மீது மும்பை போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.
இந்நிலையில் தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள கங்கனா மகாராஷ்டிர அரசை ஒப்பிடுகையில் பாலிவுட் மாஃபியா கும்பல் நல்லவர்களாகத் தெரிகிறார்கள் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.
சன்னி லியோன் வாழ்க்கை
கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிர அரசாங்கத்தால் நான் எதிர் கொண்ட வழக்குகள், துன்புறுத்தல்கள், வசைகள், அவமானங்கள் ஆகியவற்றால் பாலிவுட் மாஃபியா கும்பல் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன், ஆதித்யா பன்சோலி போன்றோர் மிகவும் அன்பானவர்களாகத் தெரிகிறார்கள்.
மனைவி மகிழ்ச்சியாக இருந்தால்
சிலரைக் கவலைகொள்ளச் செய்யும் அளவுக்கு அப்படி நான் என்ன செய்து விட்டேன் என்று வியக்கிறேன். இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.
Thanks for Your Comments