கேட்டராக்ட் பிரச்சினை உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அனுபவங்களைப் பெருகிறர்கள்.
ஆனால் கேட்டராக்ட் பிரச்சினை உள்ள அனைவருமே பொதுவாக கீழ்க்காணும் அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட அறிகுறிகளை உணர்வது வழக்கம்.
பார்க்கும் பொருட்கள் யாவும் தெளிவற்றதாகவும் அல்லது மிகவும் புகை படர்ந்த பின்னணியுடன் மங்கலாகவும் தெரிவது.
நிறங்களை பிரித்தறிவதில் சிரமம் இருப்பது, மற்றும் பார்க்கும் பொருட்கள் யாவும் மஞ்சள் நிறமாகத் தெரிவது.
சாதாரண வெளிச்சத்தில் பார்வை தெளிவற்று இருப்பதும் மிக அதிகமான வெளிச்சம் தேவைப்படுவது.
தொலைவில் உள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது.
பொருட்கள் இரண்டு பிம்பங்களாகத் தெரிவது.
அடிக்கடி கண்ணாடிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுவது.
சில வெளிச்சங்கள் மிகக் குறைவாகவும், சில வெளிச்சங்கள் மிக அதிகமாகவும் தெரிவது.
படிப்பதற்க்கும் வாகனம் ஓட்டுவதற்க்கும் சிரமம் எற்படுவது. குறிப்பாக இரவு நேரங்களில் படிப்பதற்க்கும் வாகனம் ஓட்டுவதற்க்கும் அதிகமாக சிரமம் ஏற்படுவது.
வெளிச்சத்தைச் சுற்றி வானவில் போல தெரிவது, குறிப்பாக வாகன வெளிச்சத்தைச் சுற்றி அவ்வாறு தெரியலாம்.
நிறங்கள் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம்.
Thanks for Your Comments