அரசின் சரியான திட்டமிடலால் தப்பிய சென்னை ஏரியின் சீக்ரெட் !

0

சென்னையில் இரண்டு நாளா மழை பெய்தும், நேற்று இரவு புயல் அடித்தும் கூட பெரிய அளவில் வெள்ளம் ஏற்படவில்லை. மழை காரணமாக சாலையில் தேங்கும் நீர் மட்டுமே சென்னையில் காணப்படுகிறது (Only stagnant water on the road due to rain is found in Chennai.)..

அரசின் சரியான திட்டமிடலால் தப்பிய சென்னை

வங்கக் கடலில் உருவாகி புதுவை - மரக்காணம் இடையே அதிகாலையில் கரையை கடந்த அதிதீவிர நிவர் புயலானது வலுவிழந்தது. 

சென்னைக்கு அருகே புயல் கரையை கடக்கும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் (As the storm was expected to cross the coast near Chennai) விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே புயல் கரையை முழுவதுமாக கடந்துள்ளது. 

பெண்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் ஆண்களின் ரகசியங்கள் !

இதனிடையே, புயல் கரையைக் கடந்திருந்தாலும், கனமழை பெய்யும் (Although the storm has crossed the coast, it will rain heavily) வாய்ப்பிருப்பதால் வீட்டிலேயே இருக்கும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் புதுவை முதல்வர் நாராயணசாமி.

இந்த புயல் காரணமாக சென்னையில் தீவிரமாக கனமழை பெய்தது (The storm caused heavy rains in Chennai.). நேற்று முதல்நாள் காலையில் இருந்து சென்னையில் தீவிரமாக மழை பெய்து வந்தது.

செம்பரபாக்கம் ஏரி சென்னையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரியாகும். 

சென்னை நகரின் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படும் தலையாய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரியில் இருந்து அடையாறு நதி பிறக்கின்றது.

செம்பரபாக்கம் ஏரி
இந்த ஏரியானது 500 ஆண்டுகள் பழமையானது இதன் அப்போதைய நீர்மட்டம் 19.5 அடியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீர்மட்டம் 22 அடியாக உயர்த்தப்பட்டது. 

பின்னர் தெலுங்கு கங்கைத் திட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் நீரைத் தேக்கி வைப்பதற்காக இதன் நீர்மட்டம் 24 அடியாக உயர்த்தப்பட்டது. இந்த ஏரியின் கரை 9 கிலோ மீட்டர் நீளம் உடையது. 

இந்த நிலையில் தான் 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை நேற்று எட்டியது. இதன் காரணமாக நேற்று மதியம் இந்த ஏரி திறக்கப்பட்டது. இந்த ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். 

பெண்களே வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கீங்களா?

இதன் 24 மதகுகள் வழியாக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று அடையாறு ஆற்றில் செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று அடையாறு ஆற்றில் ஏற்கனவே மழை காரணமாக வெள்ளம் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் நேற்று செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறக்கப்பட்ட பின் சென்னையில் பெரிதாக எங்கும் வெள்ளம் ஏற்படவில்லை. 

தப்பிய சென்னை

அடையாறு கரையோரத்தில் வெள்ளம் ஏற்படவில்லை. 2015 ல் இங்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட போது மழை காரணமாக அடையாற்றில் ஏற்கனவே தண்ணீர் இருந்தது. 

இதனால் அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல் அடையாற்றுடன் இணையும் மற்ற ஏரிகளிலும் தண்ணீர் முழுமையாக இருந்தது. 

கைகளில் ஏற்படும் வலிக்கான காரணம் மற்றும் தீர்வுகள் !

இந்த சிறிய ஏரிகளின் தண்ணீர், செம்பரம்பாக்கம் நீர், மழை நீர் எல்லாம் சேர்ந்து மொத்தமாக வந்த காரணத்தால் 2015 ல் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டு, சென்னை மூழ்கியது.

2015 ல் செம்பரம்பாக்கத்தில் 29000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் இந்த முறை சரியான திட்டமிடலுடன் கொஞ்சம் கொஞ்சமாக முதலில் 2000, பின் 5000, பின் 9000 கனஅடி என்று வெளியேற்றப்படும் கனஅடி நீரில் அளவு மாற்றப்பட்டது. 

ஏரியின் சீக்ரெட்

அடையாறு வெள்ளத்திற்கு ஏற்றபடி தண்ணீர் திறப்பு அவ்வப்போது குறைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் அடையாறு ஆறுக்கு மற்ற ஏரிகளில் இருந்து வரும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. 

இதனால் செம்பரம்பாக்கத்தில் இருந்து மட்டுமே அங்கு தண்ணீர் சென்றது. இதன் காரணமாக மிகப்பெரிய வெள்ளம் தவிர்க்கப்பட்டது. 

கணவன் மனைவி செய்யும் 2 வகை துரோகங்கள் !

சரியான நேரத்தில் ஏரியை திறந்தது. அதை முறையாக கண்காணித்தது ஆகிய காரணங்களால் செம்பரம்பாக்கத்தில் இருந்து பெரிய அளவில் வெள்ளம் ஏற்படவில்லை. 

இந்த நிலையில் 22 அடி உயரத்தில் தண்ணீரை சேமித்து வைக்க முடிவு செய்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings