நிவர் புயல் காரணமாக தற்போது சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு சாலைகளில் இதனால் தற்போது தண்ணீர் தேங்கி உள்ளது.
தற்போது இந்த புயல் சென்னையில் இருந்து 350 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த புயல் தமிழகத்த்தின் அருகில் வர வர மழையின் வீரியமும் அதிகமாகி கொண்டே வருகிறது.
காலிஃப்ளவர் பட்டாணி குருமா செய்வது எப்படி?
அதிலும் சென்னையில் சொல்ல முடியாத அளவிற்கு தீவிரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முதல்நாள் மாலை இருந்து சென்னையில் மழை தொடங்கியது.
அப்போதில் இருந்து இப்போது வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. நேற்று மாலை மட்டும் சில மணி நேரம் மழை இல்லாமல் இருந்தது.
பழைய சோறா? அப்படீன்னா என்ன?
தி நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், வடபழனி, அண்ணாசாலை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. கிண்டி, கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் மழை இரவு முழுக்க வெளுத்தெடுத்தது.
சென்னையில் தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் ஆறு போல தண்ணீர் தேங்கி உள்ளது. முட்டி வரை சில ஏரியாக்களில் வெள்ளம் தேங்கி உள்ளது.
தாம்பரம், கிண்டி, பல்லாவரம், வடபழனி போன்ற பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கி சில வீடுகளுக்குள் சென்றுள்ளது. வேளச்சேரி மொத்தமும் வெள்ளம் போல காட்சி அளிக்கிறது.
தண்ணீர் தேங்குவதை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும் கூட அதீத மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது.
கொரோனாவில் நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள்?
சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்களும் விழுந்துள்ளது. சாலையில் 20 க்கும் அதிகமான மரங்கள் பல இடங்களில் விழுந்துள்ளது. சென்னையில் உள்ள புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.
கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் இயல்பை காட்டிலும் 2 மீட்டர் வரை கூடுதலாக உயர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
சிக்கன் சூப் ரைஸ் செய்வது எப்படி?
புயல் காரணமாக வரும் 27-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுச்சேரியில் இன்று நிவர் புயல் காரணமாக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments