தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், இன்று அதிகாலை 5 மணியளவில் கிணறு ஒன்றில் விழுந்தது. கிணற்றில் விழுந்த யானை பிழிரியதை அடுத்து சென்று பார்த்த மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இதை மீட்க கடந்த 13 மணி நேரமாக வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் போராடி வந்தனர்.
முதலில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூக்கி விடலாம் என்று எண்ணிய தீயணைப்புத் துறையினர் யானை இருந்த கிணற்றில் இறங்கி, யானையைக் கயிறு, பெல்ட் போன்றவற்றால் கட்டி ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தித் தூக்கினர்.
ஆனால் அது தோல்வியடைந்தது (But it failed). பின்னர் மீண்டும் அந்த முயற்சியில் ஈடுபட்ட மீட்பு படையினர், சுமார் 8:20 மணியளவில் யானையைக் கிணற்றிலிருந்து மீட்டனர்.
கிணற்றிலிருந்து யானையைக் வெளியே தூக்கியவுடன் அது பயத்திலும், மகிழ்ச்சி வெள்ளத்திலும், துள்ளிக் கொண்டு ஓடியது. அருகிலிருந்தவர்கள் பதரியடித்து பயந்து அங்கும் இங்கும் ஓடினர்.
தற்போது யானை அறை மயக்கத்தில் உள்ளதால் தண்ணீர் பீச்சி அடித்து வருகின்றனர் (Currently the elephant is fainting and the water is beating).
இதை அடுத்து யானைக்குச் சிகிச்சை அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு யானையை காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்காக முயற்சிகள் நடைபெறுகிறது.
Thanks for Your Comments