எப்படி புயல் உருவாகிறது என்பதை தெரிந்து கொள்ள?

0

இன்று பலருக்கும் புயல் எப்படி உருவாகிறது? எப்படி கரையை கடக்கிறது? என தெரிவதில்லை. காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் சூட்டியுள்ள பெயர் ‘சலனம்’. 

எப்படி புயல் உருவாகிறது என்பதை தெரிந்து கொள்ள?

ஒரு புயல் தோன்றி மறைவதென்பது, தோன்றும் நிலை, வலுவடையும் நிலை மற்றும் வலுவிழந்த நிலை என்று மூன்று படிநிலைகளில் நடைபெறுகின்றது. 

புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்பு தான (The main reason for the formation of the storm is the structure of the earth.). 

ஒரு ஆரஞ்சுப்பழம் போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒரு பக்கமாக 

அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப் படுவதில்லை. 

காலில் உள்ள நகங்களை சுத்தம் செய்ய !

இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும். 

இவை அனைத்துமே ஒன்றின் தொடர்சியாக மற்றொன்று நடைபெறுகின்றது  (All of this takes place one after the other.). 

கடற்பரப்பில் 26'C அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும் பொழுது காற்று வேகமாக வெப்பமடைகிறது. வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கிச் செல்கிறது (The heated air goes upwards.). 

அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது (At that point the air pressure decreases and vacuum is created.). 

அந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது. 

பெண்களின் சரும முடிகளை இயற்கையான முறையில் நீக்க எளிய வழி !

மேலே செல்லும் வெப்பக்காற்று குளிர்வடைந்து வானில் தாழ்வு நிலையில் தங்குகிறது. இதன் காரணமாக தாழ்வுநிலை உண்டாகிறது. 

தாழ்வு நிலையின் காரணமாக அங்கு காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது (The air pressure there increases due to the depression.). 

இதுவே காற்றழுத்த தாழ்வு நிலையாகும். பஇந்த காற்றானது மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகும். 

இந்த காற்று பம்பரம் போல் வேகமாக சுழல ஆரம்பித்தால், அது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகும். 

இந்த காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிக்க (To continue to increase the speed of this wind,), குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறுகிறது. 

இது மணிக்கு, 63 கி.மீ வேகத்தை எட்டும் போது, புயல் என கணிக்கப்படுகிறது. 

எப்படி புயல் உருவாகிறது என்பதை தெரிந்து கொள்ள?

இந்நிலையிலேயே புயலின் கண் உருவாகும். காற்றழுத்த தாழ்வு நிலையின் போது 31 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகும்.
காய்கறிகளில் சத்து குறைவு இப்படியும் ஏற்படுகிறது !

புயலின் கண் பகுதியென்பது அதன் மையத்திலிருக்கும் மிதமான காற்றழுத்தப் பகுதி (The eye area of a storm is the area of moderate pressure at its center.). 

இது, சுமார் 30-65 கி.மீ விட்டம் கொண்டிருக்கக் கூடும். அங்கு நிலவும் காற்றழுத்தம் வெளிப்புறத்தில் இருப்பதைவிடக் குறைந்தே காணப்படும். 

காற்று மேலெழுந்து, பின் குளிரும் நிலையினில் சில அடர்த்தியான காற்று கீழ் நோக்கி நகர்ந்து தெளிவான புயலின் கண் பகுதி உருவாகும். 

பாம்பு கடி பற்றிய சில தகவல்கள்

அதிக வலுகொண்ட புயலின் மையப்பகுதி அடர்ந்த உருளை வடிவில் தோற்றமளிப்பதால் அதி புயலின் கண் எனப்படுகிறது.

அப்படிச் சுழலும் மேகச்சுருளின் வேகத்தையும், அதன் அடர்த்தி, பரப்பளவையும் பொறுத்துத் தான் புயலின் வலிமையை வரையறை செய்ய இயலும். 

இப்படிச் சுழலும் மேகக் கூட்டங்களை கொண்ட காற்று, கடற் பகுதியிலிருந்து கரையை நெருங்கும் போது, கனமழையுடன் கூடிய புயற்காற்று தாக்குகிறது. 

எப்படி புயல் உருவாகிறது என்பதை தெரிந்து கொள்ள?

இந்தப் புயல் நிலப்பரப்பில் நீண்டதூரம் பயணித்ததும் வலுவிழந்து காற்றின் வேகம் குறைகிறது. 

இந்தப் புயல் மீண்டும் கடலை அடையும் போது வலுவடையவும் வாய்ப்பிருக்கிறது (The storm is likely to intensify when it reaches the sea again.).

காற்றழுத்தத் தாழ்வு நிலையின் போது காற்று சாதாரணமாக மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் வீசும். மணிக்கு 32 கி.மீட்டரிலிருந்து 51 கி.மீ. வரை வீசினால் அதற்கு (காற்று) அழுத்தம் (Depression) என்று பெயர். 

பாம்பு கடித்தவுடன் செய்ய வேண்டியது

அதுவே வேகம் அதிகரித்து 52-லிருந்து 61 கி.மீ. வேகத்தில் வீசினால் அது தீவிர அழுத்தம் (Deep Depression). 62.கி.மீட்டரிலிருந்து 88 கி.மீ.வரை வீசினால் புயல் (Cyclonic strom). 

அதற்கு மேல் கடும்புயல் (89 முதல் 118 கி.மீ.), மிகக் கடும் புயல் (119 முதல் 221 கி.மீ.), சூப்பர் புயல் (222 கி.மீ.க்கு மேல்).

Cyclone என்பது, ‘சுருண்டு கிடக்கும் பாம்பு’ என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து உருவான வார்த்தை.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings