தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
இவர தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து இருப்பவர்.
இவருக்கு மும்பையில் உள்ள தொழிலதிபர் கவுதம் கிச்லுவுடன் அக்டோபர் 30-ம் தேதி திருமணம் நடத்த இரு வீட்டார் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டது.
பின்னர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நட்சத்திர ஹோட்டலில் இல்லாமல் காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
திருமணம் முடிந்தவுடன் இருவரும் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். தற்போது அங்கு கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் காஜல் அகர்வால் பகிர்ந்து வருகிறார்.
அப்படி அவர், சமீபத்தில் கடலுக்கடியில் அமைந்திருக்கும் நட்சத்திர ஓட்டலில் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
ஆனால், மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கவுதம் கிச்லு - காஜல் அகர்வால் திருமணம் இன்று நடைபெற்றது. திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாயின.
Thanks for Your Comments