இனி ஒரே நாடு, ஒரே தேர்தல் பிரதமர் பேச்சால் பரபரப்பு !

0

ஒரே நாடு ஒரே தேர்தல் வெறும் விவாதங்களுக்குரியது மட்டுமல்ல (One country, one election is not just a matter of debate).. இது இந்தியாவின் தேவையும் கூட (This is also the need of India) என கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி (Prime Minister Modi commented,), 

இனி ஒரே நாடு, ஒரே தேர்தல்
ஒரு சில மாதங்களுக்கு இடையில் வெவ்வேறு இடங்களில் தேர்தல்கள் நடத்தப்படுவதால் வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சிறு குழந்தைகளுக்கான பொது அறிகுறிகள்
1949-ம் ஆண்டு நவம்பர் 26-ல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அரசியல் சாசன நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது. இந்த நாள் அரசியல் சாசன தினமாக கொண்டாடப்படுகிறது.

அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு லோக்சபா, சட்டசபை அதிகாரிகளை உள்ளடக்கிய தலைமை அதிகாரிகள் மாநாட்டில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது:

2008 ம் ஆண்டு இதே நாளில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பையைத் தாக்கினர். வெளிநாட்டினர், போலீசார் உட்பட பலர் இறந்தனர் (Many died, including foreigners and police.). அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் (I pay tribute to them.). 

அந்த காயங்களை இந்தியா மறக்காது (India will not forget those wounds.). இன்று இந்தியா புதிய கொள்கைகளுடன் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறது (India is fighting terrorism with new policies.). 

அந்த பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் எங்கள் பாதுகாப்பு வீரர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்.

இளம் பெண்ணின் ஆடை உருவப்படும் காணொளி - எத்தனை பேர் பார்த்தீர்கள்?

லோக்சபா, சட்டசபை தேர்தல், பஞ்சாயத்து தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியல் முறை கொண்டு வரப்பட வேண்டும். தனித்தனி வாக்காளர் பட்டியல் என்பது நமது சக்தியை வீணாக்கும் செயலாகும் (A separate voter list is a waste of our energy).

எங்கள் அரசியலமைப்பில் பல அம்சங்கள் இருந்தாலும், கடமைகளுக்கு முக்கியத்துவம் என்னும் சிறப்பு அம்சமும் உள்ளது. காந்தி அதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் (Gandhi was very interested in it.). 

காது கேட்கும் திறனை பாதிக்கும் நோய்கள்

உரிமைகள் மற்றும் கடமைகளில் அவர் மிகுந்த நெருக்கத்துடன் இருந்தார். நாம் நமது கடமைகளை செய்தால் (If we do our duty,), உரிமைகள் தானாகவே பாதுகாக்கப்படும் என்பதை உணர்ந்தார் (He also realized that rights would be automatically protected.).

பிரதமர் பேச்சால் பரபரப்பு
ஒவ்வொரு சில மாதங்களிலும் பல தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆகையால் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசியல் சாசனம் தொடர்பான விழிப்புணர்வை பொது மக்களிடத்தில் அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார். 

மத்திய பாஜக அரசும் பாஜக தலைவர்களும் ஒரே நாடு, ஒரே தேர்தல் முழக்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு சட்டசபை தேர்தல்களிலும் பாஜகவுக்கு வெற்றி தோல்வி மாறி மாறி வருகிறது. பாஜகவுக்கு மிக முக்கியமான அடுத்த 2 தேர்தல்கள் தமிழகம், மேற்கு வங்க சட்டசபை தேர்தல்கள். 

திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் தீவில் விடப்படும் பெண்கள் !

இந்த நிலையில் பிரதமர் மோடி ஒரே நாடு- ஒரே தேர்தல் என மீண்டும் முழங்கியிருப்பது நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது (Is meticulously observed throughout the country.).

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings