இனி வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணி தொடரும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருப்பது அனைவரது கவனத்தையும் திசை திருப்பியுள்ளது .
மேலும் இவர் அமித்ஷாவை பற்றி கூறும்போது நவீன காலத்தின் சாணக்கியர் அமித்ஷா என்று கூறியிருப்பது இரு கட்சிகளுக்கு இடையே உள்ள கூட்டணியை வலுப்படுத்தியுள்ளது .
கட்சி மட்டும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடியார்,
துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பாஜக தலைவர்கள் வரவேற்றனர் .
அதன் பின்னர் சென்னை வர்த்தக மையம் ரூபாய் 309 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தும் திட்டத்தை l தொடங்கி வைத்தார் .
மேலும் வல்லூரில் ரூபாய் 900 கோடியில் இந்தியன் ஆயில் பெட்ரோலியம் முனையத்திற்கு அடிக்கல்லும் நாட்டினார் .
இதைத்தவிர முல்லை வாயிலில் ரூபாய் ஆயிரத்து 400 கோடி செலவில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் .
இந்த நிலையில் அதிமுக மற்றும் பாஜக வின் கூட்டணி என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது .
Thanks for Your Comments