இன்றைய டிஜிட்டல் உலகில் நாளிதழ்கள், சேட்லைட் டிவிக்கள் என அனைத்தையும் விஞ்சியுள்ளன சமூக ஊடகங்கள். காணொளிப் பதிவுகளை இடுவதற்கு யூடியூப் மிக முக்கியமான தளமாக அமைந்துள்ளது.
நடிகர் விஜய்யின், 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதாக, கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தியை நடிகர் விஜய் உடனடியாக மறுத்தார்.
மின்சாரத்தின் அளவு குறைய Fan Regulator -யை மாற்றவும் !
இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முயன்றது நான் தான் என்றும் அது விஜய்க்கு தெரியாது என்றும் கூறியிருந்தார்.
அதற்கு நடிகர் விஜய் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர், அந்த அரசியல் கட்சி முயற்சியை கை விட்டார்.
@actorvijay @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/b7BiDpZRZ3
— Bussy Anand (@BussyAnand) November 29, 2020
அவர் மற்றும் இயக்கம் தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் இனி அந்த சேனலில் தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பூச்சியின் விசித்திரமான செயலால் உண்டாகும் மரணம் !
விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் சேனல் தொடங்கப்படுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் திட்டங்கள், பணிகள் அனைத்தையும் அந்த சேனலில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் நேரத்தில் எந்த கட்சியினரும் தனது பெயர் மற்றும் இயக்கத்தின் பெயரை பயன்படுத்தி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் நடிகர் விஜய்..
Thanks for Your Comments